
தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக உள்ளது மார்கழி. கடவுள்களுக்குப் பிடித்தமாக மாதங்களில் ஒன்றாகவும் உள்ள இந்த மாதங்களில் அதிகாலை எழுந்து நீராடி வழிபாடுகள் மேற்கொள்வார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், வீட்டில் உள்ள பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் இடுவதும் இந்த மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தாக உள்ளது. டிசம்பர் 16 ஆம் தேதி மார்கழி மாதம் தொடங்கவுள்ள நிலையில், முதல் நாளிலிருந்து என்னென்ன கோலங்கள் போடலாம்? இதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இன்றைக்கு அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மார்கழி மாதம் தொடங்கினாலே பெரும்பாலான பெண்கள் அந்த மாதம் முழுவதும் என்ன கோலங்கள் போடலாம்? என்ற தேடலில் அதிகம் இருப்பார்கள். அதிகாலை 4 முதல் 6 மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்களை வரவேற்கும் விதமாக பூ கோலங்கள் இடலாம். வீட்டு வாசல் முழுவதும் விதவிதமான பூ கோலங்கள் போடும் போது வீட்டில் செல்வ செழிப்புடன் இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் படிக்க: Padi Kolam Design: மார்கழி மாதத்தை அழகுபடுத்தும் சூப்பரான 5 படிக்கோலம்
அடுத்ததாக விதவிதமான கலர் பொடிகளை வைத்து புதிய புதிய வடிவங்களில் ரங்கோலி கோலங்கள் போடலாம். பெண்கள் வீட்டில் உள்ள கவலைகள் மற்றும் மனச்சோர்வை நீக்க வேண்டும் என்றால் மார்கழி மாதத்தில் சிக்குக் கோலங்கள் போடலாம். புள்ளி கோலங்களும் போடலாம். இவ்வாறு தினமும் விதவிதமான கோலங்கள் போடுவதன் மூலம் வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பொதுவாக மார்கழி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். அதே சமயம் இந்த மாதங்களில் நல்ல காற்றுடன் ஓசோன் வாயுவும் நமக்குக் கிடைக்கிறது. எனவே தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் காலை 4 முதல் 6 மணிக்குள் கோலம் போட வேண்டும் என்பார்கள். இதோடு இந்த நேரத்தில் வானுலகத்தில் உள்ள தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு ஆசிர்வாதம் கிடைப்பதோடு நல்ல ஆற்றலையும் நாம் பெற முடியும் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளது.
மேலும் படிக்க: மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்
பெண்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு கோலங்கள் போடும் போது அவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். அதே வேளையில் அதிகாலையில் எழும் போது உடல் சோர்வு நீங்குவதோடு மன நிம்மதியும் கிடைக்கும். குணிந்து, நிமிர்ந்து வேளை செய்யும் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி பிரச்சனைக்கும் தீர்வு காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com