herzindagi
image

கார்த்திகை மாதம் வந்தாச்சு; திருக்கார்த்திகையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?

திருக்கார்த்திகை எனப்படும் பெரிய கார்த்திகை தினம் இந்தாண்டு 2025 ல் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி  கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் வீடு முழுவதும் எப்போதும் பிரகாசமாக இருக்க எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்? என்பது குறித்து விபரங்கள் இங்கே.
Editorial
Updated:- 2025-11-25, 22:02 IST

கார்த்திகை மாதம் வந்தாலே சுவாமி ஐயப்பன் மற்றும் பழனி முருகன், திருவண்ணாமலை சிவன் போன்ற தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தங்களுடைய நேர்த்திக் கடனை மக்கள் நிறைவேற்றுவார்கள். கடவுள் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் அனைத்துத் தெருக்களிலும் ஆன்மீக பாடல்கள் காதுகளில் ரீங்காரமாக ஒலிக்கும். புதிய வீடு பால் காய்ச்சினாலும், திருமணம் போன்ற வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கார்த்திகை மாதத்தில் செய்தால் அந்தளவிற்கு விசேசம் என்பார்கள். இதோடு மட்டுமின்றி கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி தினத்தில்  வரக்கூடிய திருக்கார்த்திகை எனப்படும் பெரிய கார்த்திகை நாளும் மிகவும் விசேசமானது. இந்த நாளில் வீடுகளில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருக்க வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எப்படியெல்லாம் ஏற்ற வேண்டும்? என்பது குறித்த விபரங்கள் இங்கே.

திருக்கார்த்திகை நாளில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

  • பெரிய கார்த்திகை, திருக்கார்த்திகை, கார்த்திகை தீபம் என பல பெயர்களோடு அறியப் பெற்ற இத்திருநாளில் விளக்கேற்றுவது முன்னதாக, அனைத்து விளக்குகளையும் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் விளக்குகள் அனைத்தும் மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்கவும்.
  • திருக்கார்த்திகை தினத்தில் மட்டும் விளக்கேற்றக்கூடாது. முந்தைய தினத்தில் பரணி தீபமும், கார்த்திகை நாளில் ஒரு தீபம், அடுத்த நாள் தீபம் ஏற்றுவது என தொடர்ந்து மூன்று தினங்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை முழுவதும் ஏற்றினால் மிகவும் சிறந்தது.
  • வீட்டு முற்றத்தில் 4 விளக்குகளும், சமையல் அறையில் 1, நடையில் 2, வீட்டின் பின்புறம் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2, சாமி படத்திற்கு 2, வாசலில் கோலம் போட்ட இடத்தில் 5 உட்பட 27 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். உங்களால் 27 விளக்குகளைப் போடமுடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். 27 விளக்குகளைத் தவிர வீட்டை.அலங்கரிப்பதற்காக பல விளக்குகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஏற்றிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் கடவுளின் அருளைப் பெற வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?

 

  • திருக்கார்த்திகை நாளில் விளக்குகளை வாழை இலையின் கீழே வைத்து ஏற்ற வேண்டும். பசு சாணம் கிடைக்கும் என்றால் அதை கீழே வைத்து ஏற்றலாம். விளக்குகளை எப்போதும் கிழக்கு திசையை நோக்கி ஏற்ற வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • நம்முடைய முன்னோர்கள் கார்த்திகை மாதம் முழுவதும் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள். இந்த முறையை நம்மால் முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளில் மட்டுமாவது விளக்குகளை ஏற்ற முயற்சி செய்யவும்.
  • நீங்கள் இந்த நாளில் ஒருமுறை விளக்கேற்றிய பிறகு, மீண்டும் எண்ணெய் ஊற்றக்கூடாது. அடிக்கடி தூண்டி விடக்கூடாது. தானாக தீபம் குளிரும் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் திருச்செந்தூர் முருகனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

 

thiruvannamalai

விளக்கேற்ற உகந்த நேரம் என்ன?

பொதுவாக திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு தான் அனைத்து வீடுகளிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். நினைத்தாலே மோட்சம் பெறும் திருவண்ணாமலையில் விளக்கேற்றும் போது, சிவ பெருமான் அனைத்து வீடுகளிலும் வந்து அருள் புரிய வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறையைப் பின்பற்றுவார்கள்.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com