herzindagi
immunity booster vepampoo sarbath by expert

Immunity Booster Drink : இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

உணவே மருந்து! உணவு சரியாக இருப்பின் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. உணவுக்கான முக்கியத்துவத்தை புரிந்து கொள்வோம்!
Editorial
Updated:- 2023-07-25, 18:20 IST

சளிக்கு மிளகு ரசத்தில் தொடங்கி, சிறுநீரக கற்களுக்கு வாழைத்தண்டு ஜூஸ் வரை பல நோய்களுக்கு உணவே மருந்தாகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் போதும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நினைப்பவர்கள் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள பானத்தை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

இன்றைய பதிவில் வேப்பம் பூவை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புத பானத்தை பார்க்கப் போகிறோம். இந்த வேப்பம்பூ சர்பத் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். இந்தப் பானத்தை குடித்து வர அசிடிட்டி, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலினால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கலாம். வேப்பம் பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்!

 

வேப்பம்பூ சர்பத்

தேவையான பொருட்கள்

immunity booster  vepampoo

  • தண்ணீர் - 2 கப் 
  • வெல்லம் - சுவைக்கு ஏற்ப 
  • வேப்பம்பூ - 1 ஸ்பூன் 
  • இஞ்சி - சிறிய துண்டு 
  • மிளகு பொடி - ¼ டீஸ்பூன் 
  • நறுக்கிய மாங்காய் - சிறிதளவு 
  • உப்பு - ஒரு சிட்டிகை 

செய்முறை 

immunity booster  jaggery

  • வெல்லத்தை நுணுக்கி அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும். 
  • தூசி அல்லது மண் ஏதேனும் இருந்தால் வெல்லம் நீரை வடிகட்டி தயாராக வைக்கவும். 
  • வேப்பம் பூவின் குச்சியை நீக்கிவிட்டு மலர்களை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். 
  • மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 
  • இப்போது ஒரு பெரிய கிளாசில் தயாராக வைத்துள்ள வெல்லம் நீரை ஊற்றவும். 
  • இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். 
  • கடைசியாக பொடித்து வைத்துள்ள மிளகுப் பொடி மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து பரிமாறவும்.
  • இந்த அற்புத பானமானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து குடும்பத்துடன் பருகி மகிழுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: இப்படி ஜூஸ் போட்டு குடுங்க, யாருமே வேண்டாம்னு சொல்லமாட்டாங்க! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com