நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது தான் மிகவும் முக்கியம். உங்கள் உணவில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ
நீர்ச்சத்து, சம அளவிலான ஊட்டச்சத்து மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள் உங்களை தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆற்றல் அளவையும், ஒட்டுமொத்த உடல் வலிமையையும் மேம்படுத்துகின்றன. அந்த வகையில் அன்றாட உணவில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்களை இப்போது பார்க்கலாம்.
பாதாம் பருப்புகளில் வைட்டமின் ஈ, பி2, மெக்னீசியம், இரும்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பாதாம் ஒரு சிறந்த சிற்றுண்டியாக செயல்படுகிறது. இது ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இந்த சத்துகள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இந்த செல்கள், தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு அவசியமானவை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க, சிட்ரஸ் பழங்களை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: Benefits of almonds: சருமத்தை பொலிவாக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும் - ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
தயிர் ஒரு புரோபயாடிக் நிறைந்த உணவு. இது குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பெரும்பகுதி குடலில் இருப்பதால், உங்கள் உணவில் தயிரை சேர்த்துக் கொள்வது சமநிலையை பராமரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
பூண்டு ஒரு இயற்கை அன்டிபயாடிக் ஆகும். இதில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டது. உங்கள் உணவில் பூண்டு சேர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே, உணவில் தொடர்ச்சியாக பூண்டு இடம்பெறுவதை உறுதி செய்யவும்.
ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, வீக்கத்தையும் குறைக்கின்றன. மேலும், அவற்றில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அவை உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இயற்கையாக அதிகரிப்பதற்கு ஒரு எளிமையான வழியாகும்.
கீரை வகைகளில் இயல்பாகவே ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த இவை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. அதன்படி, தினந்தோறும் ஏதேனும் ஒரு வகை கீரையை எடுத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தும் நம்முடைய உணவில் சரியான விகிதத்தில் இருந்தால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை எளிதாக வலுப்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com