இனி வரக்கூடிய மாதங்கள் அனைத்தும் மழைக்காலம். வெயில் வாட்டி வதைத்து சட்டென்று வானிலை மாறும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும். குறிப்பாக சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூட்டு வலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்று பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் உடலை எப்பாதும் வலுவுடன் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் பலவீனமாகும் போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. கடந்த ஒரு மாத காலங்களாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை காய்ச்சல் பாதிப்பால் வரக்கூடியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் தற்போது வரக்கூடிய காய்ச்சல் ஒரு வார காலத்திற்கு மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படைகிறார்கள். அதீத இருமல், மூக்கடைப்பு, உடல் சூடு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் ஒருபுறம் சாப்பிட்டாலும் பராம்பரிய உணவு முறைப்படி எப்படி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும்? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: பெண்களுக்கு இதய நோய் வராமல் தடுக்கும் பூசணி விதை; பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
காலை எழுந்தவுடன் பலருக்கும் டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். டீ குடிப்பதிலேயே நம்முடைய உணவுமுறை தொடங்கிவிடுகிறது. டீ குடிப்பதற்கு ஒன்றும் தவறில்லை. ஆனால் பருவ காலங்களில் அதற்கேற்ப சூடான பானங்களை அருந்த வேண்டும். இதற்கு சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது சுக்கு மல்லி காபி. சுக்கு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போன்றவற்றை பொடியாக்கி அல்லது கொஞ்சமாக தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து பருகவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலை வலுப்பெற செய்கிறது.
கொரோனா காலக் கட்டத்தில் நிலவேம்பு கசாயம் என்பது மிகவும் பிரபலமானது. ஆம் உடலின் நோய் எதிர்ப்பு வலுவுடன் இருந்தால் மட்டுமே எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாது. மழைக்காலங்களில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அதீத கசப்புத் தன்மைக் கொண்ட நிலவேம்பு கசாயத்தைத் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை காலையில் அருந்த வேண்டும்.
மேலும் படிக்க: அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு மூட்டுவலி பாடாய் படுத்தினால் இந்த பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள்
அடுத்ததாக பருவ காலங்களில் ஏற்படக்கூடிய சளி, இருமல் பாதிப்புகளைப் போக்குவதற்கு சிறந்த மருந்தாக உள்ளது தூதுவளை. குழந்தைகள் அதிகம் பாதித்து வரும் வைரஸ் காயச்சலைக் கட்டுப்படுத்த தினமும் தூதுவளை தண்ணீர் கொதிக்க வைத்துக் கொடுக்க வேண்டும். கொஞ்சம் கசப்புத் தன்மை இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளவும். நுரையிரலில் அதிகம் படிந்திருக்கும் சளி பாதிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
பருவநிலை கொஞ்சம் மாறினாலே பச்சைத் தண்ணீருக்குப் பதிலாக சுடு தண்ணீர் கொண்டு வர வேண்டும். சூடான குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை். மிதமான சூட்டில் அருந்தலாம். காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுப் பாதிப்புகளை அகற்றவும் உதவுகிறது.
அடுத்ததாக குழந்தைளுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றுாப் பாதிப்புதளைக் குறைக்க வே்ண்டும் என்றால் பாலுடன், வீட்டில் உள்ள மிளகுத் தூள் கலந்துக் குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
Image Credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com