herzindagi
image

தீபாவளிக்கு காரசாரமான மிக்சர் செய்முறை... வேற லெவல் ருசி

தீபாவளிக்கு இனிப்பான பலகாரங்களை ருசித்தால் மட்டும் போதுமா ? காரசாரமாக ருசிக்க மிக்சரும் உள்ளது. மிக்சரை வீட்டிலே எளிதில் செய்யலாம். அதிக நேரம் எடுக்காது.  
Editorial
Updated:- 2024-10-29, 19:35 IST

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் குலாப் ஜாமுன், அதிரசம், முறுக்கு போன்ற தின்பண்டங்களின் செய்முறையை பார்த்துவிட்டோம். இந்த பதிவில் வாய்க்கு காரசாரமாக ருசியான மிக்சர் எப்படி செய்வது என பார்க்கலாம். மிக்சர் செய்முறை கடினமாக இருக்கும் என பலரும் முயற்சிப்பதில்லை. கொஞ்சம் நேரம் கிடைத்தால் நமக்கு ஏற்ற சுவையில் வேர்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த சோளம், முந்திரி, மசூர் பருப்பு போட்டு மிக்சர் ருசிக்கலாம். தீபாவளி நாளில் மாலை நேரத்தில் இந்த மிக்சருடன் உட்கார்ந்து டிவி பார்த்தால் நாட்டாமை பட மிக்சர் காமெடி போல் நீங்களும் படம் முடியும் வரை வாயில் அரைத்து கொண்டே இருப்பீர்கள்.

மிக்சர் செய்ய தேவையானவை

  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத் தூள்
  • பேக்கிங் சோடா
  • மிளகாய் தூள்
  • வேர்க்கடலை
  • பொரித்த சோளம்
  • முந்திரி பருப்பு
  • மசூர் பருப்பு
  • கடலெண்ணெய்
  • கறிவேப்பிலை

mixture recipe

தீபாவளி மிக்சர் செய்முறை

  • மிக்சர் செய்வதற்கு முதலில் பூந்தி போட வேண்டும். ஒரு கப் கடலை மாவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விக்ஸ் வைத்து அடித்து மாவு தயாரிக்கவும்.
  • ரொம்பவும் கெட்டியாக அல்லது தண்ணீராக மாவு இருக்க கூடாது. கடாயில் அரை லிட்டர் கடலெண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் சல்லி கரண்டியில் மாவு ஊற்றி மற்றொரு கரண்டி வைத்தி அழுத்தினால் கரெக்ட் ஆக விழும்.
  • எண்ணெய்-ல் பொரித்த பிறகு தனியாக எடுத்து வைக்கவும். இதே போல ஓமப்பொடி தயாரிக்க ஒரு கப் கடலை மாவில் கால் கப் அரிசி மாவு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாவு தயாரிக்கவும்.
  • இதனிடையே அரை கப் மசூர் பருப்பை 8 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து உலர்த்தி வைக்கவும்.
  • ஓமப்பொடிக்கு மாவு தயாரித்த பின் அச்சில் போட்டு சூடான எண்ணெய்-ல் பிழிந்து இரண்டு பக்கமும் வறுக்கவும். நிறம் மாறக் கூடாது.
  • இதை தனியாக வைத்த பிறகு ஒவ்வொன்றாக அரை கப் மசூர் பருப்பு, அரை கப் வேர்க்கலை, 100 கிராம் முந்திரி பருப்பு, 100 கிராம் பொட்டுக்கடலை போட்டு வறுத்து எடுக்கவும்.
  • அடுப்பை ஆஃப் செய்தவுடன் இருக்கும் சூட்டிலேயே ஒரு கைப்பிடி கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
  • இப்போது அனைத்தையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உங்களுக்கு பிடித்த பொரித்த சோளத்தை சேர்த்து காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் போட்டு கலந்து விடுங்கள்.
  • சூடு குறைந்தவுடன் ருசி பாருங்கள்... தீபாவளி மிக்சர் வேற லெவல் ருசியில் இருக்கும்.

மேலும் படிங்க தீபாவளி பலகாரம் சுவையான அதிரசம் செய்முறை

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com