தீபாவளி பண்டிகை என்றால் வீட்டில் முறுக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, அதிரசம் போன்ற பலகாரங்கள் செய்வது வழக்கம். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வேறு விதமான இனிப்பு பிடிக்கும் என்பதால் அம்மா கட்டாயமாக அனைத்தையும் செய்து கொடுப்பார்கள். பண்டிகை காலத்தில் இனிப்புகளை ருசிக்க தவறினால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்க போவதில்லை. பலருக்கும் குலாப் ஜாமுனில் விரிசல் விழுகிறது, சர்க்கரை பாகு சரியாக வரவில்லை என்ன செய்வது என்ற கேள்விகள் இருக்கும். அதற்கு தீர்வு தரும் வகையில் சூப்பரான பஞ்சு போன்ற சுவையில் குலாப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
![gulab jamun recipe]()
குலாப் ஜாமுன் செய்யத் தேவையானவை
- எம்.டி.ஆர் குலாப் ஜாமுன் மிக்ஸ்
- பால்
- தண்ணீர்
- நெய்
- நல்லெண்ணெய்
- ஏலக்காய்
- குங்குமப்பூ
மேலும் படிங்க நாவில் கரையும் திருவையாறு அசோகா அல்வா ஸ்வீட்! எளிய செய்முறை...
குலாப் ஜாமுன் செய்முறை
- இந்த பதவில் எம்.டி.ஆர் குலாப் ஜாமுன் மிக்ஸ் 175 கிராம் பயன்படுத்தி செய்முறை பகிரப்பட்டுள்ளது. வாசகர்களாகிய நீங்கள் எந்த குலாப் ஜாமுன் மிக்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- முதலில் கால் லிட்டர் பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துவிடுங்கள்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் மிக்ஸ் பவுடர் போட்டு முக்கால் டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி பிசைய தொடங்கவும்.
- நீங்கள் தண்ணீர் கூட பயன்படுத்தலாம், எனினும் பால் அதிக சுவை தரும்.
- மாவை ரொம்பவும் அழுத்தி சப்பாத்தி மாவு போல் தயாரிக்காமல் விரல்களை மட்டுமே பயன்படுத்தி பொறுமையாக பிசையவும்
- ஒட்டும் பதத்தில் மாவு வந்துவிட்டால் நிறுத்திவிடுங்கள். தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்க்கவும். முக்கால் டம்ளர் பாலில் இருந்து கொஞ்சம் அதிகமாக தேவைப்படலாம்.
- இதை மூடி போட்டு மூடி ஓரு ஓரமாக வைத்திடுங்கள்.
- சர்க்கரை பாகு தயாரிக்க கடாயில் 500 கிராம் சர்க்கரை போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கரையவிடுங்கள்.
- சர்க்கரை கரைந்து பாகு தயாராகும் போது 10 கிராம் குங்குமப்பூ மற்றும் 3-4 ஏலக்காய் இடித்து சேர்க்கவும்.
- குங்குமப்பூ நல்ல நிறமும், ஏலக்காய் மனமும் தரும். ஒரு கம்பி பதம் தேவையில்லை. கொஞ்சம் கெட்டியாக வந்தவும் நிறுத்திவிடுங்கள்.
- அடுத்ததாக கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவி இரண்டு கோலி குண்டு சைஸிற்கு மாவு உருட்டவும்.
- உள்ளங்கையில் வைத்து மாவை அழுத்தி உருட்டவு. விரிசில் வராதபடி கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி உருட்டுங்கள்.
- நாம் பயன்படுத்தும் அளவுகளில் இருந்து 30 குலாப் ஜாமுன் வரை தயாரித்திடலாம்.
- கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி மிதமான தீயில் வைத்து குலாப் ஜாமுன் உருண்டைகளை பொட்டு 6-8 நிமிடங்களுக்கு முழுமையாக பொரிக்கவும்.
- இறுதியாக சர்க்கரை பாகில் குலாப் ஜாமுன்களை போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு ஆளுக்கு இரண்டு என வீட்டில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்.
- தீபாவளிக்கு தங்க மோதிரமே வாங்கி போட்டுவிடுவார்கள்.
இதுபோன்ற தீபாவளி பலகாரங்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.