
வீட்டில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வது என்பது பலருக்கும் ஒரு சவாலான காரியமாக இருக்கும். அதிலும் டாய்லெட்டில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை நீக்குவது இன்னும் கடினம். இதற்கு ஏதேனும் சிம்பிளான வழிகள் இருக்கிறதா என்று பல நேரங்களில் நாம் யோசித்திருப்போம். அதற்கான வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: உங்கள் வீட்டில் கொசுக்களை தடுப்பது எப்படி? பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க எளிய குறிப்புகள்
பெரும்பாலும் வீட்டில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் தினசரி சுத்தம் செய்வோம். ஆனால், கழிவறைகளை மட்டும் ஒரு சில நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வோம். இதன் காரணமாக அதில் மஞ்சள் கறைகள் மற்றும் அழுக்குகள் படிந்து, நீக்குவதற்கு கடினமாக மாறிவிடுகின்றன. இதனால் கிருமிகள் பெருகி பலவிதமான நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

கழிவறையை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை முழு பலனை தருவதில்லை. இவற்றில் சில பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதற்கு ஒரு எளிய மற்றும் செலவில்லாத தீர்வு உள்ளது. அந்த தீர்வு உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகள் ஆகும்.
உங்கள் வீட்டில் உள்ள ஐஸ் டிரேயில் இருந்து ஒரு கைப்பிடி ஐஸ் கட்டிகளை எடுத்து, அதை டாய்லெட் கோப்பையில் நேரடியாக போட்டு விடுங்கள். ஐஸ் கட்டிகள் உருகும் வரை, சுமார் அரை மணி நேரம் டாய்லெட்டை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஐஸ் கட்டிகள் உருகும்போது அந்த குளிர்ச்சியான நீர், கோப்பையின் மேற்பரப்பில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் கறைகளை மென்மையாக்கி தளர்த்துகிறது.
மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
ஐஸ் கட்டிகள் முழுவதுமாக உருகிய பின்னர், டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யுங்கள். அந்த வேகமாக செல்லும் நீர், மென்மையான கறைகளை அடித்து செல்லும். அதன் பிறகு, நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டாய்லெட் கிளீனரை ஊற்றி, பிரஷ் கொண்டு தேய்க்கலாம். இது மீதமுள்ள கறைகளையும் நீக்கி டாய்லெட்டை பளபளப்பாக மாற்றும். உறைந்த ஐஸின் குளிர் வெப்பநிலை, கறைகளை மென்மையாக்கி, தேய்ப்பதை எளிதாக்குகிறது. இது சுத்தம் செய்யும் நேரத்தை குறைப்பதுடன், அதிக சிரமமில்லாமல் தூய்மையாக்குகிறது.

சுத்தமான கழிவறை என்பது சுகாதாரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இதுபோன்ற எளிய விஷயங்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது, கிருமிகள் மற்றும் கறைகள் சேருவதை தடுக்கலாம். இது உங்கள் வீட்டை சுத்தமாகவும், உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com