herzindagi
image

இனி கடைகளில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே ஆரோக்கியம் நிறைந்த ஜாம் செய்யலாம்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜாம் செய்வதற்கு வெறும் அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஊட்டச்சத்துக்களுடன் கூடிய சுவையான ஜாம் செய்திடலாம்.
Editorial
Updated:- 2025-10-29, 23:55 IST

இன்றைய பரப்பான சூழலில் பலரின் காலை உணவாக உள்ளது பிரெட் மற்றும் ஜாம். அதிலும் வீட்டை விட்டு வெளியூரில் தங்கி பயிலும் மற்றும் பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே பல நேரங்களில் பிரெட் மற்றும் ஜாம் மட்டும் தான் அவர்களின் வயிற்றை நிரம்ப செய்திருக்கிறது. பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் கடைகளில் விற்பனை செய்தாலும், அந்த ஜாம்கள் நிச்சயம் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்குமோ? என்பது கேள்விக்குறித் தான். டப்பாவில் அடைத்து வைத்திருக்கும் ஜாம்கள் பல நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிச்சயம் சில கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருமுறையாவது வீட்டில் தயார் செய்யப்படும் ஜாம்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.

மேலும் படிக்க: கீழே உட்கார்ந்து எழ முடியாத அளவிற்கு மூட்டு வலியா? கால்சிய சத்துக்கள் கொண்ட லட்டு செய்து சாப்பிடுங்க!

ஜாம் என்றவுடன் ஏதோ ஏதோ புதிய பொருட்களைக் கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைப் பயன்படுத்தி செய்துக் கொள்ள முடியும். இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.


வீட்டிலேயே சுவையான ஜாம்

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் - 2
  • விதை இல்லாத பேரீச்சம்பழம் - 15
  • தண்ணீர் - 1 கப்
  • நெய் - 1 டீஸ்பூன்
  • வெல்லம் - 1/4 கப்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

மேலும் படிக்க: சமையலை ரொம்ப ஈஸியாக்கணுமா? இந்த குக்கிங் டிப்ஸ்களைப் பாலோ பண்ணுங்க

ஜாம் செய்முறை:

  • வீட்டிலேயே குழந்தைகளுக்குப் பிடித்தமான சுவையான ஜாம் செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கலவை சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் அரை கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • கொஞ்சம் கட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துக் கொள்ளவும். கொஞ்சம் கட்டியான பதத்திற்கு வந்தால் போதும் சுவையான வீட்டில் தயார் செய்யும் ஜாம் ரெடி.
  • இதை பிரெட்டின் இருபுறமும் தடவி சாப்பிடவும். வழக்கமாக சாப்பிடும் ஜாம் போன்று இல்லாமல் அதீத சுவையைக் கொடுக்கும்.

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com