herzindagi
rava breakfast recipe kichadi

Perfect Rava Kichadi : இப்படி ரவா கிச்சடி செஞ்சு பாருங்க, தினமும் செய்ய சொல்லி கேட்பாங்க!

நெய் தழும்ப தழும்ப, கரண்டியில் ஒட்டாமல் வாயில் போட்ட உடனே கரைந்து விடும் பெர்ஃபெக்ட்டான ரவா கிச்சடி, இனி நீங்களும் வீட்டிலேயே செய்யலாம்…
Editorial
Updated:- 2023-08-17, 14:37 IST

காலை உணவிற்கு உப்புமா என்று சொல்லி இனிய காலை பொழுதை போரிங் ஆக மாற்ற வேண்டாம். உணவுக்கு சுவையை விட மிக முக்கியம் பெயர் வைப்பது. இதே உப்புமாவில் கொஞ்சம் நெய் மற்றும் காய்கறிகள் சேர்த்தால் அது தான் கிச்சடி! காலை உணவுக்கு கிச்சடி என்று சொல்லி பாருங்கள், நீங்கள் கூப்பிடுவதற்கு முன்னரே அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகி விடுவார்கள்.

ரவா கிச்சடி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவாகும். கிச்சடிக்கு தேவையான விஷயங்களை தயாராக வைத்தால் போதும், டக்குனு 10 நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம். ரவா கிச்சடியை டிபன் சாம்பார் அல்லது தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் அற்புதமாக இருக்கும். ரவா கிச்சடி சரியான பக்குவத்தில் வர இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள டிப்ஸ் மற்றும் ரெசிபியை பின்பற்றுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி தோசை, காலை உணவுக்கு இப்படி ஹெல்தியா செஞ்சு சாப்பிடுங்க!

 

ரவா கிச்சடி எப்படி செய்வது?

rava recipes

இதை கவனித்துக் கொள்ளுங்கள் 

  • ரவையை நன்கு வறுத்தால் ஒன்றோடு ஒன்றா ஒட்டாமல் சரியான பக்குவத்தில் கிடைக்கும். 
  • ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீரை பயன்படுத்துங்கள். 
  • இந்த ரெசிபி செய்வதற்கு வெள்ளை ரவைக்கு பதிலாக கோதுமை ரவையையும் பயன்படுத்தலாம். 
  • கிச்சடி செய்வதற்கு நல்ல தரமான பசு நெய்யை பயன்படுத்துங்கள். 
  • கிச்சடி செய்யும் பொழுது ரவையுடன் கொதிக்கும் நீரை மட்டுமே சேர்க்க வேண்டும். 

தேவையான பொருட்கள் 

  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • பட்டை - 1 சிறிய துண்டு 
  • கிராம்பு 2-3
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • இஞ்சி - சிறிய துண்டு  
  • பிரிஞ்சி இலை - 1
  • முந்திரிப் பருப்பு 10-15
  • பச்சை மிளகாய் 2-3
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • காய்கறி கலவை - 1 கப் 
  • ரவை - 1 கப்
  • தண்ணீர் - 3 கப் 

செய்முறை 

rava kichadi for breakfast

  • முதலில் உங்களுக்கு விருப்பமான கேரட், பீன்ஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தயாராக வைக்கவும். 
  • கிச்சடி செய்வதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றி சூடாக்கவும். 
  • இதில் பட்டை கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, பிரியாணி இலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும் 
  • அடுத்ததாக பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 
  • இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும். 
  • பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டாம். 
  • காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளவும். 
  • காய்கறிகளுடன் ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். 
  • மற்றொரு அடுப்பில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். 
  • ரவை வறுபட்டவுடன் கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கிளறி, ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு வைக்கவும். 
  • கடைசியாக கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய் சேர்த்து கிளறி சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறலாம். 
  • இந்த சுவையான ரவா கிச்சடியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து மகிழுங்கள்!

 

இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் அவல் இருக்கா? அப்போ இரண்டு நாளைக்கு காலை டிபன் ரெடி!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com