
Benefits of curd: சில உணவுகள் பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால், அவற்றில் இருந்து நமக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கும். அப்படி ஒரு உணவு பொருள் தான் தயிர். இதில் இருந்து நாம் அடையக் கூடிய பயன்களை பார்க்கலாம்.
தயிர், சீரான ஊட்டச்சத்துகளை வழங்கும் ஒரு முழுமையான உணவாகும். 100 கிராம் தயிரில் சுமார் 11 கிராம் புரதம் (Protein) மற்றும் 98 கலோரிகள் உள்ளன. இதில் மெதுவாக செரிமானமாகும் பால் புரதமான கேசின் (Casein) உள்ளது. இந்த படிப்படியான செரிமானம் உடலில் அமினோ அமிலங்களை நிலையாக வெளியிடுவதன் மூலம், உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கிறது. இது அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.

தயிர் அதன் புரோபயாடிக்ஸ் (Probiotics) காரணமாக செரிமானத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இதன் குளிர்ச்சியான தன்மை புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.
மேலும் படிக்க: Jowar millet benefits: கூந்தல் ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை சோளத்தினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடல் மற்றும் மூளை இடையேயான தொடர்பை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம் மனநிலையை மேம்படுத்தும் ஆற்றல் தயிரில் இருக்கிறது. இது பதற்றத்தை குறைத்து, தெளிவு பெற வைப்பதாக கூறப்படுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வீக்கத்தை கட்டுப்படுத்தி, உணவுமுறை அழுத்தத்தின் போது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. இதனால் உங்கள் உடல் நோய்களை எதிர்க்கும் திறனுடன் இருக்கும்.
மேலும் படிக்க: World heart day: உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த உணவுகளை நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்
தயிரின் பி.ஹெச் (pH) அளவு சுமார் 4.5 முதல் 5.5 வரை இருக்கும். இது லேசான அமிலத்தன்மை கொண்டது. இது அதிகப்படியான இரைப்பை அமிலத்தை (Gastric Acid) சமன் செய்ய உதவுகிறது. கூடுதலாக, இதில் உள்ள புரதங்கள் வயிற்று அமிலங்களுடன் பிணைந்து, இலகுவான உணர்வை தருகின்றன.

வியர்வை, சுவாசம் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற சாதாரண உடல் செயல்முறைகள் கூட பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை இழக்க செய்யலாம். தயிர், 75%க்கும் அதிகமான நீரால் ஆனது. மேலும், இது கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலை நீரேற்றம் செய்ய (Rehydrate) உதவுகின்றன. மேலும் தசைப்பிடிப்பு மற்றும் சோர்வை தடுக்கின்றன.
உங்கள் அன்றாட உணவு பட்டியலில் தயிரை சேர்ப்பதன் மூலம், உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com