herzindagi
image

சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விருந்து படைக்க இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க

முதன்மைக் கடவுளான விநாயகரின் பிறந்த நாளில் அவருக்குப் பிடித்த பலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அதற்கான ரெசிபிகள் டிப்ஸ்கள் சில உங்களுக்காக.  
Editorial
Updated:- 2025-08-20, 16:50 IST

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தியில் வரக்கூடிய இந்நாளில் முதன்மைக் கடவுளான விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களை செய்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக பூரண கொழுக்கட்டை, லட்டு, சுண்டல் போன்ற தின்பண்டங்கள் தான் பிரதானமாக இருக்கும். இதோ இந்த ரெசிபிகளையெல்லாம் எப்படி செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ்கள் உங்களுக்காக.

விநாயகர் சதுர்த்தி ரெசிபிகள்:

பூரண கொழுக்கட்டை:

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் முதலில் அனைவரின் நினைவுக்கு வரக்கூடும். இந்த ரெசிபியை வீடுகளிலேயே மிகவும் சுலபமாக செய்து விட முடியும்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - ஒரு கப்
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • வெல்லம் - அரை கப்
  • ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு - சிறிதளவு
  • எள் - சிறிதளவு

கொழுக்கட்டை செய்முறை:

 

  • பூரண கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் கடாயில் தேங்காய் துருவலைப் போட்டு லேசாக வறுக்கவும். இதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்தது சுருள கிளறவும்.
  • 5 நிமிடங்களுக்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் போது தேங்காய் பூரணம் ரெடி.
  • ஒருவேளை உங்களுக்கு கடலைப்பருப்பு அல்லது எள் சேர்த்து பூரணம் செய்ய வேண்டும் நினைத்தால், அவற்றை கொஞ்சம் மிக்ஸியில் அரைத்துக் கொண்டால் போதும்.

மேலும் படிக்க: பேக்கரி ஸ்டைலில் சுவையான வாழைப்பழ கேக்; சிம்பிள் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

அடுத்ததாக கொழுக்கட்டைக்கான மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை எடுத்து சிறிதளவு தண்ணீர் பிசைந்துக் கொள்ள வேண்டும். பூரண கொழுக்கட்டைக்காகவே உள்ள அச்சுகளில் மாவு மற்றும் பூரணத்தை வைத்து பிடித்து வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான பூரண கொழுக்கட்டை ரெடி. அச்சு இல்லையென்றால் கைகளில் பிடித்தும் கொழுக்கட்டை செய்துக் கொள்ளலாம்.

 

விநாயகருக்குப் பிடித்த லட்டு:

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 1 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • நெய் - அரை கப்
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு
  • முந்திரி, திராட்சை - சிறிதளவு

 


லட்டு செய்வதற்கு முதலில் கடலை மாவுடன் நெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் இரண்டையும் மிக்ஸியில் நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

இந்த கலவை அனைத்தையும் சேர்த்துக் கிளற வேண்டும். நெய் சேர்த்து பிடிக்கும் அளவிற்கு கலந்துக் கொண்டு அதனுடன் முந்திரி, திராட்சை சேர்த்து லட்டுக்களாக பிடித்து விநாயகருக்குப் படைக்கலாம். இந்த ரெசிபிகள் மட்டுமில்லாது சுண்டலை வேக வைத்தும் விநாயகருக்குப் படையல் செய்யலாம்.

 Image credit - pexels

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com