herzindagi
image

விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்குப் பால் பூரி செய்து கொடுக்கலாமா? எளிய செய்முறை இங்கே!

குழந்தைகளுக்குப் பிடித்தமான இனிப்பு வகைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் பால் பூரியை இந்த முறையில் செய்துக் கொடுக்கலாம்.
Editorial
Updated:- 2025-09-29, 10:37 IST

பள்ளி குழந்தைகளுக்கு தற்போது காலாண்டு முறை விட்டாச்சு. இனி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னதாகத் தான் பள்ளிகள் ஆரம்பமாகும். பொதுவாக குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் தான் நேரத்திற்கு சாப்பிடுவார்கள். அதுவே விடுமுறை என்றால் நொறுக்குத் தீனிகள் தான் அதிகம் இடம் பெறும். இந்த சுழலில் தினமும் கடைகளில் ஸ்நாக்ஸ்கள் வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் சமாளிக்க முடியாது. இதைத் தவிர்க்க விரும்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், ஒருமுறையாவது ரவை வைத்து செய்யக்கூடிய இனிப்பான பால் பூரி செய்துக் கொடுங்க. எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க;  முழு விபரம் இங்கே

குழந்தைகள் விரும்பும் பால் பூரி:

தேவையான பொருட்கள்:

  • பால் - அரை லிட்டர்
  • ரவை - 1 கப்
  • ஏலக்காய் - 10
  • முந்திரி - 5
  • கசகசா- அரை டீஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு கப்
  • தண்ணீர் - தேவையான அளவு

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!

பால் பூரி செய்முறை:

  • குழந்தைகள் விரும்பக்கூடிய பால் பூரி செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் ரவையை அரைத்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
  • இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
  • தற்போது பால் பூரி செய்வதற்கான மாவு ரெடி.
  • இதையடுத்து அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், கசகசா, முந்திரி, ஏலக்காய் போன்றவற்றை அரைத்து பாலுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
  • ஒரு 10 நிமிடங்களுக்குப் பிறகு பாலுடன் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

 மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

  • இதையடுத்து பிசைந்து வைத்துள்ள ரவை மாவை சிறு சிறு பூரிகளாக்கி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • இறுதியாக ஒரு பாத்திரத்தில் பொரித்த பூரி மற்றும் காய்ச்சி வைத்துள்ள பால் கலவையையும் சேர்த்துக் கொண்டால் போதும். சுவையான பால் பூரி ரெடி. இதற்கு மேலும் கூடுதல் சுவைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நட்ஸ் வகைகள் அல்லது ப்ரூட்டி பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற முறைகளில் செய்தால் குழந்தைகள் மட்டுமல்ல நிச்சயம் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com