Butter Chicken Kathi Roll Recipe: சுவையான பட்டர் சிக்கன் கதி ரோல் செய்வது எப்படி?

சப்பாத்தியில் செய்யப்படும் சுவையான பட்டர் சிக்கன் கதி ரோல் தற்போது பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறி உள்ளது. பட்டன் சிக்கன் கதி  ரோல் செய்முறை குறித்து இதில் பார்க்கலாம்.

 
butter chicken kathi roll recipe

சப்பாத்தி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாகும். ஆனால் அதை வெறும் சப்பாத்தியாக சாப்பிடாமல் நவீன காலத்திற்கு ஏற்ப பல உணவுப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி ரோல்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவாக மாறி உள்ளது. அதிலும் சப்பாத்தி ரோலில் சிக்கனை பயன்படுத்தி செய்யப்படும் சப்பாத்தி ரோல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

பட்டர் சிக்கன் கதி ரோல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை வட இந்தியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் இந்த உணவு அவர்களின் பிரதான உணவாக கூட உள்ளது. நாம் பசியுடன் இருக்கும் நேரத்தில் இது சரியான சிற்றுண்டியாக இருக்கும்.

இந்த சுவையான பட்டர் சிக்கன் கதிரோலை எப்படி செய்வது? இந்த பட்டர் சிக்கன் கதி ரோல் செய்வது மிகவும் எளிது. கிட்டத்தட்ட 20 நிமிடங்களில் இதை நாம் சுவையாக தயாரித்து விடலாம்.

butter chicken kathi roll recipe

பட்டர் சிக்கன் கதி ரோல்-க்கு தேவையான பொருட்கள்

  • 2 எலும்பு இல்லாத கோழி துண்டுகள்
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
  • 2 பூண்டு , துண்டு துண்டாக வெட்டப்பட்டது
  • 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 1/2 கப் தயிர்
  • சுவைக்கு உப்பு
  • 4-6 சப்பாத்தி
  • நறுக்கிய வெங்காயம்
  • துண்டுகளாக்கப்பட்ட தக்காளி
  • கொத்தமல்லி இலைகள்

பட்டர் சிக்கன் கத்தி ரோல் செய்வது எப்படி?

  1. தொடங்குவதற்கு, மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அரைத்த பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து மற்றொரு நிமிடம் வதக்கவும்.
  2. ஒரு கிண்ணத்தில், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து கலக்கவும். கடாயில் இந்த மசாலா கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. கடாயில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அவை நன்கு வேகும் வரை சமைக்கவும். தீயை குறைத்து, தயிரை வாணலியில் சேர்க்கவும். கோழியை சமமாக பூசுவதற்கு நன்கு கிளறி, சுமார் 5-7 நிமிடங்கள் அல்லது கோழி மென்மையாகும் வரை சமைக்கவும்.
  4. இப்போது, சூடான வழக்கமான சப்பாத்தியை எடுத்து கொள்ளவும். அல்லது சப்பாத்தி மாவை வட்டமாக தேய்த்து அடுப்பில் வாட்டி கருகாமல் சூடாக்கவும்.
  5. ஒரு ஸ்பூன் பட்டர் சிக்கன் கலவையை சப்பாத்தியின் மையத்தில் பரப்பவும்.
  6. ஒரு ரோலை உருவாக்க சப்பாத்தியின் பக்கங்களை மடியுங்கள்.
  7. பட்டர் சிக்கன் கதி ரோல் தயார். சூடாக பரிமாறவும். மிதமான சூடு குறைந்தால் சுவை குறைந்து விடும்.

மேலும் படிக்க:கேரளா-ஸ்டைல் மட்டன் கறி ரெசிபி

image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP