நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால் மட்டன் இறைச்சியை வாரம் ஒரு முறை தினசரி செய்யும் குழம்பு பொரியல் வறுவல் என்ற முறையிலேயே நாம் சாப்பிட்டு வந்திருப்போம்.
மட்டன் இறைச்சியை வாரத்தின் இரண்டு முறையாவது நமது உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மட்டன் இறைச்சியில் புரத சத்து நிறைந்துள்ளது. பலரும் மட்டன் இறைச்சியை விருந்துகளிலோ அல்லது விசேஷ சந்தர்ப்பங்களிலோ விரும்பி உண்பார்கள்.
மட்டனை மிகவும் சுவையாக சத்தாகவும் நமக்கு பிடித்த முறையில் சமைத்து சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். கட்லெட் என்றாலே உணவகங்களில் சென்று தான் சாப்பிட முடியும் என்ற எண்ணம் இருக்கும் இனி கவலை தேவையில்லை. சுவையான ஹைதராபாத் மட்டன் கட்லெட் செய்வது எப்படி என்பது குறித்து இப்ப பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மட்டன் கட்லெட் தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ ஆட்டு இறைச்சி (சிறு சிறு துண்டுகளாக வெட்டியது)
- இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் 1
- மஞ்சள் 1/4 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை பொடி 1/4 டீஸ்பூன்
- வெங்காயம் 1
- உருளைக்கிழங்கு 1
- கொத்தமல்லி சிறிதளவு
- கறி மசால் தூள் 1/4 டீஸ்பூன்
- பிரட் தூள் சிறிதளவு
- தேவைக்கேற்ப உப்பு
ஹைதராபாத் மட்டன் கட்லெட் செய்முறை
- முதலில் மட்டனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து அதை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த மட்டன் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடாயை சிறிது நேரம் சூடாக்கி நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் மற்ற மசாலா பொருட்களை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- மசாலா பொருட்கள் சூடு குறைந்த உடன் அரைத்து சேர்த்து வைத்த மட்டன் மற்றும் உருளைக்கிழங்கு மசியல் ஆகியவற்றுடன் நன்கு கலந்து பிசையவும்.
- பின்னர் கலந்து எடுத்த மட்டன் கலவையை கட்லெட் வடிவில் வட்ட வடிவில் எடுத்து பிரட் தூள்களில் மூழ்கும் அளவு பிரட்டி எடுக்கவவும். பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்த கட்லெட்டை அரை மணி நேரம் வெளியில் தனியாக வைக்கவும்.
- கடாயை சூடு செய்து மிதமான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர் வட்ட வடிவில் எடுத்து வைத்த கட்லெட்டை ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும்.
- கட்லட் நன்றாக சமைக்க நேரம் ஒதுக்கவும். பின்பு கட்டிலட்டை மறுபுறம் திருப்பவும். பொன்னிறமாக வரும் வரை நன்றாக ஒவ்வொரு முறையும் பிரட்டி போட்டு எடுக்கவும்.
- கட்லெட்டுகளை வறுத்த பிறகு அவற்றை ஒரு பேப்பர் டவலில் எடுத்து கூடுதல் எண்ணெய் வெளியேறும் வகையில் துடைக்கவும்.
இப்போது சூடான மட்டன் கட்லெட் தயார் அதனுடன் டொமேட்டோ சாஸ் அல்லது புதினா சட்னி வைத்து பரிமாறவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation