herzindagi
egg recipes

Boiled Egg Chukka : வேகவைத்த முட்டையில் சுக்காவா, கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!

சிக்கன் அல்லது மட்டனை வைத்து சுக்கா செய்து நிச்சயம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஒரு முறை வேக வைத்த முட்டையை வைத்து இது போல சுக்கா செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-07-11, 22:20 IST

ஞாயிற்றுக்கிழமைகளில் பலரின் வீடுகளிலும் சிக்கன் அல்லது மட்டனை கொண்டு சுக்கா செய்வார்கள். ஆனால் வார நாட்களில் சுக்கா சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தால், முட்டையை வைத்து இதுபோல சுக்கா செய்து சாப்பிடலாம். முட்டையை வைத்து பல விதமான ரெசிபிகளை செய்யலாம். ஆனால் ஒரு சிலருக்கு வேக வைத்த முட்டை பிடிப்பதில்லை. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவை குழந்தைகள் முதல் ஒரு சில பெரியவர்கள் வரை பலரும் ஒதுக்கி விடுகிறார்கள். வேகவைத்த முட்டையுடன் மசாலாக்களை சேர்த்து சமைத்து கொடுத்துப் பாருங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவாங்க.

சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கறி மசாலா பொடி என இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கலவை முட்டையுடன் சேர்ந்து அற்புதமான சுவையை கொடுக்கும். இதை ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் கலக்கலாக இருக்கும். சப்பாத்தி, தோசை அல்லது பரோட்டாவுடன் இந்த ரெசிபியை செய்து உண்டு மகிழுங்கள். முட்டை சுக்கா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஓட்ஸ் ஸ்மூத்தி, உங்கள் எடை இழப்பை எளிதாக்கும்!


தேவையான பொருட்கள்

egg side dish recipes

  • வேகவைத்த முட்டை - 5
  • சின்ன வெங்காயம் 10-15
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு 
  • கிராம்பு - 4
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - ¼ டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் 
  • மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் 
  • தனியா பொடி - 1.5 டீஸ்பூன் 
  • கறி மசாலா பொடி - ½ டீஸ்பூன் 
  • மிளகு பொடி - ½ டீஸ்பூன்
  • கறிவேல்லை - சிறிதளவு

செய்முறை

egg chukka recipe

  • முதலில் முட்டையை வேகவைத்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பகுதியை தனியாக பிரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி தயாராக வைக்கவும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  •  வெங்காயத்தின் நிறம் மாறும் சமயத்தில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் பொடி மிளகாய் பொடி மற்றும் தனியா பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்ததாக முட்டையின் வெள்ளை கருவைவை மட்டும் சேர்க்க வேண்டும். (உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முட்டையை 4-8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம். 
  • பின்னர் கறி மசாலா மிளகு பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  • கடைசியாக மஞ்சள் கருவை சேர்த்து கவனமாக கிளறி, கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.
  • மஞ்சள் கருவை சேர்த்த பிறகு அதிகமாக கிளற வேண்டாம். இந்த முட்டை சுக்கா ரெசிபியை சப்பாத்தி, பூரி, தோசை அல்லது  பரோட்டாவுடன் பரிமாறலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: சாம்பார் பாதி குருமா பாதி, இனி இட்லி தோசைக்கு இது தான் பெஸ்ட் காம்பினேஷன்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com