Benefits of almonds:ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ஊற வைத்த பாதாம் பருப்புகளை பலர் சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதனடிப்படையில், தினமும் ஊற வைத்தை 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் நமது ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்று காணலாம். பாதாமை ஊற வைக்கும் போது, அதன் சத்துகள் எளிதாக உடலுக்குள் சேருகின்றன. இதனால், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது:
பாதாமை ஊற வைக்கும் போது அதன் பழுப்பு நிற தோலில் டானின் மற்றும் ஃபைடிக் அமிலம் நீங்கிவிடுகிறது. இந்த அமிலங்கள் ஜீரணத்தையும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுக்கின்றன. அதனால், ஊறவைத்த பாதாம் எளிதாக செரிமானம் ஆகி, வயிறு உப்புசம் மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்:
சருமத்திற்கு பொலிவை கொடுப்பதில் பாதாம் பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது சருமத்தில் இருக்கும் செல்களை மாசு மற்றும் அதிகமான சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அந்த வகையில் ஒரு மாதம் தொடர்ச்சியாக ஊற வைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால், நம்முடைய சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருப்பதை நாம் உணரலாம். இது வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
நினைவாற்றலை மேம்படுத்த உதவும்:
மூளையின் செயல்பாட்டை பாதாம் அதிகரிக்கிறது. இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் எல்-கார்னைடைன் போன்ற சத்துகள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகின்றன. பாதாம் ஒரு அதிசய உணவு அல்ல என்றாலும், தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெற்று, கவனம் மற்றும் மனத் தெளிவு மேம்படலாம்.
மேலும் படிக்க: மலச்சிக்கல் முதல் செரிமான பிரச்சனை வரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிவி பழத்தின் நன்மைகள்
இருதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் பாதாம்:
ஹெச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிப்பதிலும், எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பை குறைப்பதிலும் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது நீண்ட காலத்திற்கு இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பாதாம்:
பால் அளவுக்கு கால்சியம் இல்லாவிட்டாலும், பாதாமில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்கள் உள்ளன. ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பாதாம் சாப்பிடும் போது, அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்ப்பதில் உதவியாக இருக்கின்றன.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்:
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதாம் சிறந்த உணவு. பாதாமிற்கு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம், உணவுக்கு பிறகு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் சிறிய அளவு பாதாமை சாப்பிடுவது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு இதனை மாற்றாக பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு உங்கள் உணவில் ஒரு அங்கமாக பாதாமை சேர்ப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டு, அன்றைய நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation