சமீபகாலமாக, பலரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறி வருகிறார்கள். உடல் எடை குறைப்பு என்பது பலரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அப்படி, உடல் எடையை குறைப்பதில் முட்டை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆரோக்கியமான மற்றும் நிறைவான உணவுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்கும்.
மேலும் படிக்க: Bone health: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகை உணவுகள்; அளவுடன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை!
புரதச்சத்தின் ஒரு ஆற்றல் மையம் போன்று முட்டை திகழ்கிறது. இவை தசைகளை உருவாக்கவும், சீரமைக்கும் பெரிதும் உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை புரதச்சத்து ஒழுங்குப்படுத்துகிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். ஒரு முட்டையில் சுமார் 70 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனால், முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், குறைந்த கலோரியில் வயிறு நிரம்பிய உணர்வை பெற முடியும். முட்டையை உண்பதால், மற்ற அதிக கலோரி கொண்ட உணவுகளை தவிர்ப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.
முட்டையில், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, ஆற்றலை அதிகரித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இதன் தாக்கம் உடல் எடை குறைப்பில் நமக்கு வெளிப்படுகிறது. எனினும், முட்டையை எப்படி சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். சமையல் முறைகளை பொறுத்து முட்டையில் உள்ள கலோரி அளவுகள் மாறும்.
மேலும் படிக்க: செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
உங்கள் பொழுதை முட்டையுடன் தொடங்குவது இதற்கு சிறந்த வழி. காலையில் முட்டை சாப்பிடுவதால், மதியம் வரை பசியின்றி இருக்க முடியும். இதனால், மற்ற அதிக கலோரி உணவுகளை உண்பதை தவிர்க்கலாம். முட்டையுடன் முழு தானிய பிரட், காய்கறிகள் அல்லது அவகேடோ சேர்த்து சாப்பிடலாம். முட்டையை வேகவைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம். இந்த முறைகள், முட்டையில் கூடுதல் கொழுப்புகள் சேர்வதை தவிர்க்க உதவுகிறது. ஒரு வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடுவது போதுமானது. உங்கள் தினசரி கலோரி இலக்கை பொறுத்து, முட்டையின் எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.
உடல் எடையை குறைக்க முட்டையை சாப்பிடும் போது, அதனுடன் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம். இது உங்கள் உணவு சரியான விகிதத்தில் இருக்க உதவும். முட்டையை தனியாக மட்டுமில்லாமல், சாலட், சாண்ட்விச் அல்லது சூப் (soup) போன்றவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம். இது உங்கள் உணவுக்கு கூடுதல் புரதச்சத்தை சேர்க்கும். குறைந்த எண்ணெய் அல்லது நெய்யில் தயாரிக்கப்படும் முட்டை பொடிமாஸ் பலருக்கு விருப்பமான உணவாக இருக்கிறது.
அந்த வகையில் சரியான முறையில் எடுத்துக் கொண்டால், உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் முட்டை ஒரு சிறந்த அம்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com