herzindagi
kumbakonam kadapa recipe easy

Kumbakonam Kadappa : சாம்பார் பாதி குருமா பாதி, இனி இட்லி தோசைக்கு இது தான் பெஸ்ட் காம்பினேஷன்!

இட்லி, தோசைக்கு சாம்பார், குருமா, சட்னி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இந்த கும்பகோணம் கடப்பா ரெசிபியை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-07-07, 10:31 IST

கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த ரெசிபி. பக்குவமாக வேகவைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு மற்றும் தேங்காயின் கலவை தான் இந்த ரெசிபியோட ஹைலைட். இந்த தனித்துவமான ரெசிபி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது. சாம்பார் மற்றும் குருமாவின் காம்பினேஷனில், இது ஒரு தனித்துவமான சுவையில் இருக்கும்.

அதிக தண்ணியாகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் இந்த குழம்பை சாப்பிட்டால், போதும் என்று சொல்லவே மனம் வராது. இதில் இன்னொரு சிறப்பு விஷயம் என்றால் வீட்டில் விருந்தாளிகளுக்கு அல்லது நிறைய பேருக்கு சமைக்க வேண்டிய சூழலில் இந்த ஈஸியான குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால் குண்டான் நிறைய குழம்பு வைத்தாலும் நொடியில் காலியாகி விடும். இந்தக் கடப்பா செய்வதற்கான முறை மற்றும் சில உதவி குறிப்புகளை பதிவில் பார்க்கலாம். 

 

 

இந்த பதிவும் உதவலாம்: புரதம் நிறைந்த அடை தோசை, ஒரே மாவில் 2 டிபன் ரெடி!

 

குறிப்பு 

  • இதில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக பல காய்கறிகளின் கலவையையும் பயன்படுத்தலாம்.
  • தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் காரத்திற்காக பச்சை மிளகாயை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஆகையால் உங்கள் தேவைக்கு ஏற்ப பச்சை மிளகாயின் எண்ணிக்கையை அனுசரித்துக் கொள்ளவும்.
  • தேங்காயுடன் சேர்த்து அரைக்க பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு, கசகசா போன்ற எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தி இந்த குழம்பை எளிதில் செய்திடலாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து இந்த ரெசிபியை கட்டாயமாக செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

side dish for idly

  • உருளைக்கிழங்கு 3-4
  • பாசி பருப்பு - ¼ கப்
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை - 4
  • தக்காளி - 1
  • உப்பு - தேவையான அளவு

அரைக்க

  • 1/2 கப் புதிய துருவிய தேங்காய்
  • 5 பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • பூண்டு பல் - 5
  • கிராம்பு - 2
  • அன்னாசி பூ - 1
  • ஏலக்காய் - 2
  • இலவங்கப்பட்டை - 2
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை

kumbakonam kadappa recipe

  • முதலில் பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய் மற்றும் சோம்புடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயத்தின் நிறம் மாறிய பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்.
  • இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
  • கடாயை மூடி போட்டு மூடி குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • தக்காளி சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் அடுப்பை அணைத்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
  • அட்டகாசமான இந்த கும்பகோணம் கடப்பாவை இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சைவ நாட்களில், இது போல வெஜிடேரியன் மீன் வறுவல் செய்து அசத்துங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com