முட்டை சாப்பிடும் போது அதில் இருக்கும் மஞ்சள் கருவின் மூலமாக கொழுப்பு அதிகரித்து அவை இரத்த குழாய்களில் படிந்து கொள்வதாக பலர் கூறுகின்றனர். இது மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், இதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து ஏராளமான மக்கள் அறிவதில்லை. அந்த வகையில், இது தொடர்பான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க: Uses of cumin water: செரிமானத்தை சீராக்குவதில் இருந்து நச்சுகளை அகற்றுவது வரை; சீரக தண்ணீரின் 6 அற்புத பயன்கள்
ஒரு முட்டையில் 70 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 முதல் 6 கிராம் கொழுப்பு, 1.50 கிராம் நிறை கொழுப்புகள் ஆகியவை இருக்கின்றன. மேலும், சுமார் 180 முதல் 200 மில்லி கிராம் அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால், உணவுகளில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை பெரிதாக அதிகப்படுத்துவதில்லை என்று ஆய்வுகளில் தெரிய வந்ததாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
மேலும், தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வதால் ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், மற்றுமொரு ஆராய்ச்சி முடிவுகளில் தினமும் ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு சுமார் 11 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? மருத்துவர் சொல்லும் உண்மை
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
எனவே, முட்டை சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார். எனினும், ஆரோக்கியமான முறையில் முட்டையை அவித்து சாப்பிட வேண்டும் என்று பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனை பரோட்டா மற்றும் ஃபிரைட் ரைஸ் போன்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் முட்டையின் பயன்கள் நமக்கு முழுமையாக கிடைக்காது. மேலும், சில உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதனடிப்படையில் எந்த ஒரு உணவு பொருளையும் அதன் சத்துகள் சரியான முறையில் கிடைக்கும் வகையில் சாப்பிட்டால் நமது ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com