herzindagi
breakfast puttu instant recipe

3 Instant Puttu Recipes : இதை விட ஈஸியா புட்டு செய்யவே முடியாது!

ஆவி பறக்க புட்டு குழலை விட்டு நழுவி வரும் புட்டை பார்த்தால் வரும் பாருங்க சந்தோஷம். அட, காசு பணத்தால் கூட நல்ல உணவுக்கு நிகரான திருப்தியை கொடுக்க முடியாது.
Editorial
Updated:- 2023-07-26, 18:29 IST

பொதுவாக புட்டு செய்ய அரிசி ஊறவைத்து, காயவைத்து, அரைத்து, ஆவியில் வேகவைத்து அல்லது வறுத்து, பல முறை ஜலித்து பக்குவமாக மாவு தயாரிக்க வேண்டும். இந்த வேலைகளை எல்லாம் யோசித்தாலே புட்டு சாப்பிட வேண்டும் என்ற ஆசையே போய்விடும். இனி புட்டு செய்ய வேண்டும் என்றால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. டக்குனு செஞ்சு ஆசையை தீர்த்துக்கொல்லாம்.

இன்றைய பதிவில் சுலபமாக செய்யக்கூடிய 3 புட்டு ரெசிபிகளை பார்க்கப் போகிறோம். இந்த மூன்று ரெசிபிக்களையும் செய்வது மிக மிக சுலபம். கட்டாயமாக நீங்களும் இந்த ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்கள்.

புட்டு மாவு பதம்

மாவை கையில் எடுத்து பிடித்தால் கொழுக்கட்டை போல இருக்க வேண்டும் அதே சமயம் மாவை உதிர்த்துப் பார்க்கும் பொழுது சுலபமாக உடைய வேண்டும். இதுதான் புட்டு மாவிற்கான சரியான பதம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க! 

 

ரெசிபி 1 : அரிசி புட்டு 

rice puttu

  • இந்த புட்டு செய்வதற்கு பாரம்பரிய அரிசி வகைகள் அல்லது புழுங்கல் அரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • அரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.  
  • மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு, அரிசியை 10 நிமிடங்களுக்கு உலர விடுங்கள். 
  • அரிசி முழுமையாக உலர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரிசி அதிகமாக ஈரத்தன்மையுடன் இருக்கக் கூடாது. 
  • இப்போது அரிசியை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.  
  • இந்த பொடியை நேரடியாக ஆவியில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம். 
  • உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்தால் புட்டு அட்டகாசமாக இருக்கும். 

ரெசிபி 2 : அவல் புட்டு 

aval puttu

  • இந்த புட்டு செய்வதற்கு உங்களுக்கு விருப்பமான எந்த அவலையும் பயன்படுத்தலாம். 
  • வெறும கடாயில் அவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசனை வரும் வரை 5 நிமிடங்களுக்கு வறுக்கவும். 
  • அவல் ஆறிய பிறகு, இதனை நன்கு பொடித்து கொள்ளவும். 
  • தயாராக உள்ள மாவில் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு மாவை தயார் செய்யவும். 
  • இதை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் 8-10 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும். 
  • வெந்த புட்டில் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம். 
  • நீங்கள் விரும்பினால் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை இன்னும் அதிகமாக இருக்கும் 

ரெசிபி 3 :கோதுமை புட்டு 

wheat puttu

  • கோதுமை மாவை வெறும் கடாயில்  சேர்த்து வாசனை வரும் வரை 10 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். 
  • குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும். 
  • வறுத்த கோதுமை மாவில் தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவைத்து கொள்ளவும். 
  • நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறலாம். 

குறிப்பு : இதில் இனிப்பு சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள், புட்டு மாவை அரைக்கும் பொழுது ஏலக்காயை சேர்க்க வேண்டாம். எப்போதும் போல புட்டு மாவை ஆவியில் வேகவைத்து எடுத்து கடலை கறியுடன் பரிமாறலாம். புட்டு மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும். 

 

இந்த பதிவும் உதவலாம்: குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்னாக்ஸ்! 


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com