herzindagi
image

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசையா? தினமும் காலையில் இந்த விஷயங்களைச் செய்ய மறந்திடாதீங்க!

மன அழுத்தம் என்பது மனிதர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடிய கொடிய நோய்களில் ஒன்றாக உள்ளது. இவற்றை முறையாக கையாளவில்லையென்றால் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது.
Editorial
Updated:- 2025-12-02, 17:47 IST

இயந்திர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நாள் முழுவதும் வேலை, தூக்கமின்மை, குடும்பத்தில் சண்டை சச்சரவு, அலுவலகத்தில் பணிச்சுமை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. இவற்றை முறையாக கவனிக்காத போது தான் சாதாரண மன அழுத்தமானது நோயாக வலுப்பெறுகிறது. இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் ஆண்கள், பெண்கள் என அனைவரும் மன அழுத்த பாதிப்பிற்காக உளவியல் மருத்துவர்களை நாடிச் செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் தினமும் காலையில் மறக்காமல் அடிப்படையான சில விஷயங்களை மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள். என்னென்ன என்பது குறித்த விபரம் இங்கே!

மன அழுத்த பாதிப்பை நிர்வகிக்க செய்ய வேண்டியது?

  • நாம் தினசரி நாளைத் தொடங்கும் போது மன அழுத்தம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தியானம் மேற்கொள்வது நல்லது. காலையில் தினமும் 15 அல்லது 20 நிமிடங்கள் தியானம் மேற்கொள்ளும் போது மனதை ஒரு நிலைப்படுத்தப்படுத்த முடியும். அலுவலகம் மற்றும் பணியிடத்தில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் மனப்பக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.
  • காலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறீர்களோ? அந்தளவிற்கு உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும். காலதாமதமாக எழுந்திருக்கும் போது நினைத்த வேலைகளை உரிய நேரத்தில் செய்ய முடியாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது முதல் பணிக்குச் செல்லும் வரை அவசர அவசரமாக செய்யும் போது ஒருவித பதட்டம் ஏற்படும். இதுவே மனஅழுத்த பாதிப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், எவ்வித மனபதட்டமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் இல்லாத போது உடல் சோர்வு ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆசையா? கட்டாயம் வாழ்க்கையில் இந்த பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!

 

  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், எவ்வித மனபதட்டமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் இல்லாத போது உடல் சோர்வு ஏற்படக்கூடும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை, சிட்ரஸ் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: அதிகமாக உழைத்தும் பலன் இல்லையா? உங்கள் செயல்திறனை பாதிக்கும் 5 பழக்கங்கள்  இவை தான்

  • வாழ்க்கையில் மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும் என்று நினைத்தால், எப்போது நேர்மறையான மனநிலையுடன் நாளை தொடங்க வேண்டும். எவ்வளவு சிரமமானப் பணிகளை நீங்கள் கையாள வேண்டும் என்று நினைத்தாலும் மிகவும் துணிவுடன் இருக்க வேண்டும்.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com