image

Winter Skin Care: குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் 5 கடலை மாவு ஃபேஸ் பேக்

Face Pack for Skin Glow: குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் 5 கடலை மாவு ஃபேஸ் பேக் குறித்து இதில் பார்க்கலாம். இவை உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-12-11, 15:18 IST

குளிர்காலத்தின் போது சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாக பலர் கூறுகின்றனர். குளிர்ந்த காற்று, சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிந்து கொள்வது, இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்த க்ரீம்களை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு இதற்கு தீர்வு காண முடியும்.

குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக வைக்க உதவும் கடலை மாவு ஃபேஸ் பேக்:

 

அந்த வகையில், பல ஆண்டுகளாக சரும பராமரிப்பில் கடலை மாவு ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதோடு, குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை போக்கி முகத்தை மிருதுவாக மாற்றுகிறது. இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும் 5 விதமான கடலை மாவு ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

 

சருமத்தை ஜொலிக்க வைக்கும் கடலை மாவு ஃபேஸ் பேக்:

 

குளிர்காலத்தில் முகம் மங்கலாக, வறண்டு போய் காணப்படும். இப்படி இழந்த பொலிவை மீட்டெடுக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். கடலை மாவுடன், பால் கிரீம் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும் இயற்கை மாய்ஸ்சரைசர் போன்று செயல்படும்.

 

தேவையான பொருட்கள்:

 

  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - சில துளிகள்
  • பால் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, பால் கிரீம் மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக சேர்க்கவும்.
  • இதை நன்றாகக் கலந்து மென்மையான பசை பதத்திற்கு கொண்டு வரவும்.
  • முதலில், முகத்தை பன்னீர் அல்லது க்ளென்சர் கொண்டு சுத்தம் செய்து துடைக்கவும்.
  • பின்னர், இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சீராக தடவவும்.
  • இதற்கடுத்து, 15 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடவும்.
  • இது நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் மென்மையான துணியால் துடைத்தால் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

மேலும் படிக்க: Dark Lips Home Remedies: உதடுகளில் இருக்கும் கருமையை போக்க உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ

 

கருமையை நீக்க கடலை மாவு மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்

 

குளிர்காலத்தின் போது இருக்கும் வெயிலிலும் கூட சருமம் கருமையாகும் வாய்ப்பு இருக்கிறது. சருமத்தில் உள்ள கருமையை (Tan) போக்க பப்பாளி மற்றும் ஆரஞ்சு சாறு கலந்த இந்த ஃபேஸ் பேக் சிறந்தது.

Winter Skin Care

 

தேவையான பொருட்கள்:

 

  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • நன்கு மசித்த பப்பாளி - சிறிதளவு
  • ஆரஞ்சு சாறு - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • முதலில் பப்பாளியின் தோலை நீக்கி, அதனை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் கடலை மாவு மற்றும் ஆரஞ்சு சாறை சேர்க்கவும். இந்த கலவை அதிக கெட்டியாகவோ அல்லது அதிக தண்ணீராகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
  • இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் இதை கழுவி விடவும்.
  • இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், கருமை நீங்கி ஒரே சீரான நிறத்துடனும் காணப்படும்.

 

சருமத்தை டோனிங் செய்ய உதவும் கடலை மாவு மற்றும் பன்னீர்:

 

தளர்வடைந்த சருமத்தை இறுக்கமாக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் பன்னீர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் உதவும்.

 

தேவையான பொருட்கள்:

 

  • கடலை மாவு - தேவையான அளவு
  • பன்னீர் - தேவையான அளவு

 

செய்முறை:

 

  • கடலை மாவுடன், பன்னீர் சேர்த்து பசை போன்று குழைத்துக் கொள்ளவும்.
  • இதை முகத்தில் தடவி முழுமையாக காயும் வரை விடவும்.
  • இது காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரால் கழுவவும். கழுவும் போது கைகளால் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
  • இவ்வாறு துடைத்த பிறகு, ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகம் முழுவதும் தடவவும். இது சரும துளைகளை இறுக்கமாக்கி புத்துணர்ச்சி தரும்.

மேலும் படிக்க: Foods for Skin Glow: குளிர்காலத்தில் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும் 5 உணவுகள் இதோ

 

வறண்ட சருமத்திற்கான தேன் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்:

 

டோனிங் ஃபேஸ் பேக்கையே வறண்ட சருமம் உள்ளவர்கள் சற்று மாற்றியமைத்து பயன்படுத்தலாம். தேன் ஒரு இயற்கையான சாஃப்ட்னர் போன்று செயல்படுகிறது.

Skin Care Tips

 

தேவையான பொருட்கள்:

 

  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • பன்னீர் - சிறிதளவு
  • தேன் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

  • கடலை மாவு மற்றும் பன்னீர் கலவையுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • தேன் சருமத்தின் வறட்சியை போக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும். குளிர்காலத்தில் தோல் உரியும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

 

சரும நிறத்தை மேம்படுத்த கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்:

 

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, சரும நிறம் மேம்படுவதற்கு பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த இந்த ஃபேஸ் பேக் உதவும்.

 

தேவையான பொருட்கள்:

 

  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • பால் - சிறிதளவு

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசை போன்று கலக்கவும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். பால் சருமத்திற்கு பொலிவை தரும்; எலுமிச்சை அழுக்குகளை நீக்கும்.

 

கடலை மாவு இயற்கையான பொருள் என்பதால் பக்க விளைவுகள் ஏற்படுவது குறைவு. இருப்பினும், எலுமிச்சை சாறு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com