தமிழர்களின் பண்டிகையான தமிழ் புத்தாண்டு மிகவும் முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. அரசு விடுமுறை என்பதால் இந்த தினம் பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க புது படங்களும் வரிசையாக ரிலீஸாகும்.
கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழ் புத்தாண்டுக்கு குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே ரிலீஸாகின. கடந்த வருடம் பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு 5க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸாகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:விமலுக்கு தங்கையான அனிதா சம்பத்.. வெளியானது ‘தெய்வ மச்சான்’ ட்ரெய்லர்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் லீட் ரோலில் நடித்துள்ளார். வைப் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அருள்நிதி மற்றும் பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் திருவின் குரல். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமந்தாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான சாகுந்தலம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் சரித்திர கதையை மையமாக கொண்டது. 3டியில் படம் தியேட்டரில் வெளியாகிறது.
யோகி பாபு நடித்துள்ள காமெடி திரைப்படமாக யானை முகத்தான் திரைப்படம் இந்த தமிழ் புத்தாண்டுக்கு நேரடியாக தியேட்டரில் வெளியாகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படமும் இந்த தமிழ் புத்தாண்டுக்கு தியேட்டரில் வெளியாகிறது. காமெடி ஜானர் என்பதால் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தமிழ் புத்தாண்டுக்கு சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகின்றன. மாஸ்டர் மகேந்திரன் நடித்த 'ரிபப்பரி', புதுமுங்கள் நடித்த 'இரண்டில் ஒன்று' ஆகிய படங்களும் ரசிகர்களை கவர ரேஸில் குதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: தேசிய விருது வென்ற தமிழ் நடிகைகள் மொத்தம் இத்தனையா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com