களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தார் நடிகர் விமல். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு பிறகு இருவரின் கெரியரும் அடுத்த லெவலுக்கு சென்றது. களவாணி படத்திற்கு முன்பு விமல் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். விஜய் நடித்த குருவி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்து இருப்பார். பல போராட்டங்களுக்கு பின்பு விமலுக்கு கோலிவுட்டில் அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது.
இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை கங்கனா எப்படி குறைத்தார் தெரியுமா?
அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மன்னர் வகையறா, ஊர்ல ரெண்டு ராஜா, மூன்று பேர் மூன்று காதல், போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் அடுத்தடுத்த தோல்விக்கு பிறகு விமல் விலங்கு சீரிஸில் நடித்தார். அந்த சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக விலலின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பிற்கு மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் விமல்.
இவரின் தெய்வ மச்சான் மற்றும் துடிக்கும் கரங்கள் போன்ற படங்கள் அடுத்தடுத்த ரிலீஸூக்கு ரெடியாகவுள்ளன. அந்த வகையில் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ள தெய்வ மச்சான் திரைப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியது. காமெடி ப்ளஸ் குடும்ப ட்ராமாவாக தயாராகி இருக்கும் இந்த படத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விமலின் தங்கையாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லை இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை நேகா. இவர் அமெரிக்காவில் மருத்துவம் படித்து முடித்தவர். சினிமா மீது ஆசைக்கொண்டு கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இவர்களை தவிர படத்தில்பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் - தங்கை பாசம், ஜாலியான கதை என பக்கா ஃபேமலி ட்ராமாவாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனிதா சம்பத்தின் ரோலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். பிக் பாஸ் நிக்ழ்ச்சிக்கு பிஏறகு அனிதா கமிட்டன முதல் திரைப்படம். படத்தின் ட்ரெய்லரை தனது இன்ஸ்டாவிலும் அனிதா ஷேர் செய்துள்லார்.
இந்த பதிவும் உதவலாம்:வசூல் சாதனை.. பத்து தல மற்றும் விடுதலை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com