தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் பிரபலமாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்கிறது. கடந்த 8 சீசன்கள் வெற்றிக்கரமான முடிந்த நிலையில் சீசன் 9 ம் அதே உற்சாகத்துடன் மீண்டும் ஒளிப்பரப்பாகிறது. விரைவில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக எப்போது பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவுள்ளது என தகவல்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வருகின்ற அக்டோபர் 5, 2025 அன்று மாலை 6.30 பிரமாண்டமாகத் தொடங்கவுள்ளது. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியை விஜய் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்யும் அதே நேரத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் ஒளிப்பரப்பப்படும். மக்களின் நாயகன் என அறியப்படும் விஜய் சேதுபதி தொகுப்பாளராக மீண்டும் களமிறங்குவதால் அதிக நாடகம், த்ரில், இடைவிடாத பொழுதுபோக்கு நிறைந்த சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
View this post on Instagram
மேலும் படிக்க: பிக்பாஸ் எவிக்ஷன் : மூட்டை முடிச்சை கட்டிய அருண்; இந்த வாரமும் 2 எவிக்ஷன் ?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ல் ரீல்ஸ் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தொலைக்காட்சி நடிகையான பரினா ஆசாத், புவி அரசு, பால சரவணன், வினோத் பாபு, ரக்ஷன் மற்றும் அரோரா சின்க்ளேர் போன்றவர்கள் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. இதோடு இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி, சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் உள்ளிட்ட பல சோசியல் மீடியா பிரபலங்களும் பங்கேற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நிச்சயம் சண்டைக்கும், சச்சரவுகளுக்கும் எவ்வித பஞ்சமும் இருக்காது.
கடந்த சீசன்களைப் போன்றில்லாமல், இந்த முறை பல புதி மாற்றங்களுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இதுவரை நடந்த சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன்ராவ், ஆரி அர்ஜூனன், ராஜு ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஜெகதீசன் ஆகியோர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Image credit - Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com