சினிமா படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தேசிய விருது 1954 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 68 தேசிய விருது விழாக்கள் நடந்து முடிந்துள்ளன.
அந்த வகையில் தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகளின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தமன்னாவின் டயட் ரகசியம் என்ன தெரியுமா?
நடிகை ஷோபா 1979 ஆம் தேசிய விருது பெற்றார். பசி என்ற படத்தில் இவர் நடித்த குப்பம்மா ரோலுக்காக தேசிய விருது ஷோபாவுக்கு வழங்கப்பட்டது.
சிந்து பைரவி படத்திற்காக நடிகை சுஹாசினி 1985ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.
1987ஆம் ஆண்டு வெளியான வீடு படத்திற்காக ந்டிகை அர்ச்சனா தேசிய விருது பெற்றார். இந்த படத்தில் சுதா என்ற ரோலில் அவர் நடித்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பருத்தி வீரன் படத்திற்காக கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ப்ரியாமணி தேசிய விருது பெற்றார். இந்த படத்தில் முத்தழகு ரோலில் அவர் நடித்திருந்தார்.
தென்மேற்கு பருவகாற்று படத்தில் வீராயி என்ற ரோலில் பவர் ஃபுல் கிராமத்து அம்மாவாக நடித்த் சரண்யா பொன்வன்னணுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு இந்த விருது வாங்கப்பட்டது.
மகாநதி படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு சூரறை போற்று படத்திற்காக நடிகை அப்ர்ணா பாலமுரளி தேசிய விருது பெற்றார். பொமி கதாபாத்திரத்துக்காக இந்த விருது வழங்கப்பட்ட்து.
இந்த பதிவும் உதவலாம்:இளம் வயதிலே மரணமடைந்த தமிழ் நடிகைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com