herzindagi
image

They call him OG OTT release: ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? முழு விவரம் இதோ

They call him OG OTT release: பவன் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான 'They call him OG' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பவன் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Editorial
Updated:- 2025-10-21, 11:54 IST

They call him OG OTT release: சமீபத்தில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற 'They call him OG' திரைப்படம், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க: OG movie box office collection day 1: 'ஓஜி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைக்கும் பவன் கல்யாண்

 

சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், ஷ்ரேயா ரெட்டி, அர்ஜூன் தாஸ், பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடிப்பில், தமன் இசையில் உருவான திரைப்படம் 'They call him OG'. பவன் கல்யாண் ரசிகர்கள் இடையே நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 

They call him OG - கதைச்சுருக்கம்:

 

மும்பையில் பெரும் கேங்ஸ்டராக இருந்த ஓஜஸ் கம்பீரா (பவன் கல்யாண்) சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது கடந்த கால வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய சூழல் உருவாகிறது. அவர் எதற்காக மும்பையில் இருந்து வெளியேறினார்? மீண்டும் எதற்காக கேங்ஸ்டராக மாறினார்? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

OG OTT release

மேலும் படிக்க: Kantara Chapter 1 box office collection: வசூல் வேட்டையில் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம்; பல படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து சாதனை

 

முழுக்க முழுக்க பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இப்படத்தை இயக்குநர் சுஜீத் எடுத்திருந்தார். பவன் கல்யாணின் அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவரது பாணியிலான திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகவில்லை. இதனை ஈடுசெய்யும் விதமாக 'They call him OG' திரைப்படம் அமைந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக, முதல் நாளிலேயே சுமார் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்ததாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

'They call him OG' ஓடிடி வெளியீடு:

 

இந்நிலையில், 'They call him OG' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 23-ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் 'They call him OG' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவன் கல்யாணின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக 'They call him OG' திரைப்படம் அமைந்திருந்தாலும், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனால், ஓடிடி வெளியீட்டில் 'They call him OG' திரைப்படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com