Shaakuntalam Movie : சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

samantha next movie

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’யசோதா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்தடுத்த படங்களில் சமந்தா கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு சமந்தா மிகவும் மனமுடைந்தார். அதுமட்டுமில்லாமல் அவரை மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் தாக்கியது.

அதற்காக 6 மாத காலம் சிகிச்சையில் இருந்தவர், அதிலிருந்து மீண்டு தற்போது பூரணமாக குணமடைந்து வருகிறார். யோகா, பயணம் , உடற்பயிற்சி என தனி வழியில் செல்லும் சமந்தா புராணக்கதையான ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என சாகுந்தலம் பான் இந்தியா மூவியாக ரிலீஸாகவுள்ளது. சாகுந்தலம் 3டி வெர்ஷனில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. படத்தில் சகுந்தலாவாக சமந்தாவும், துஸ்யந்த் வேடத்தில் மலையாள நடிகர் தேவமோகனும் நடித்து உள்ளனர். இவர்களுடன் கௌதமி, ஈஷார் ரெப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லை இந்த படத்தின் மூலம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகியுள்ளார். ட்ரைலரில் கடைசியாக சிங்கத்தின் மீது அவர் அமர்ந்து வரும் காட்சிகள் கவனத்தை பெற்றன.

samantha look shaakuntalam

இந்நிலையில் சமந்தா சாகுந்தலம் படத்தை பார்த்து முடித்து விட்டார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களான தில் ராஜு,நீலிமா குணாவுடன் சேர்ந்து படத்தை பார்த்து விட்டு, நெகிழ்ச்சியில் அதுக் குறித்து இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

அந்த பதிவில் சமந்தா கூறியிருப்பதாவது, ‘காத்திருக்க முடியவில்லை, இன்று சாகுந்தலம் படத்தை பார்த்தேன். குணசேகருக்கு என் இதயத்தை தருகிறேன். என்னொரு அழகான படைப்பு. மிகப் பெரிய பிரம்மாண்ட காவியம் உயிர்பெற்று நிற்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும். குழந்தைகளும் மயாஜால உலகத்தை ரசிக்க போகிறார்கள். இப்படியொரு படைப்பை தந்த தில் ராஜூ மற்றும் நீலிமாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். படம் குறித்த சமந்தாவின் இந்த முதல் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

samantha ruth prabhu

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக்
செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP