ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ . பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் மேக்கிங்கும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் உலக ஹிட் என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாரி குவித்த இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பப்பட்டது. இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். நாட்டு நாட்டு பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை கைப்பற்றியது.
இந்த பதிவும் உதவலாம்:புடவையில் செம்ம அழகு! இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபோட்டோ ஷூட்
நிச்சயம் ஆஸ்கார் போட்டியிலும் விருதை வெல்லும் என படக்குழு நம்பினர். ரசிகர்கள் பலரும் நாட்டு நாட்டு பாடலுக்கு கண்டிபாக ஆஸ்கார் கிடைக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்று வரும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். இந்த தருணத்தை அரங்கத்தில் இருந்த ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கொண்டாடினர். இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார். விருதை மேடையில் பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் கீரவாணி, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார்.
தெலுங்கு சினிமாவுக்கு இந்த தருணம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். கடந்த 2008ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக 'சிறந்த ஒரிஜினல் பாடல்' பிரிவில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவும் உதவலாம்:டாடா முதல் ரன் பேபி ரன் வரை இந்த வாரம் ஓடிடிக்கு வரும் படங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation