Oscar 2023 : ஆஸ்கார் மேடையில் ஒலித்த குரல்! யார் இந்த கார்த்திகி கொன்சால்வ் மற்றும் குனீத் மோங்கா?

95வது ஆஸ்கார் விருது விழாவில் 2 ஆஸ்கார்களை தட்டி தூக்கிய 2 இந்திய பெண்களை நினைத்து மொத்த இந்தியாவும் பெருமை கொள்கிறது. யார் அவர்கள்? அவர்கள் சாதித்துக் காட்டியது என்ன? என்பதை இந்த பதிவில் பார்போம். 

 
women oscar winners

ஒவ்வொரு சினிமா கலைஞனின் இலக்கு ஆஸ்கார். சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்காரை வெல்ல ஆசைப்படாத கலைஞர்களே இல்லை. தனது படைப்புக்கு எப்படியாது ஆஸ்கார் கவுரம் கிடைத்து விடாத என ஏங்கும் படைப்பாளிகள் இங்கு அதிகம். இந்நிலையில் 95 ஆவது ஆஸ்கார் விழா இந்திய சினிமாவுக்குக்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கிய நாட்டு நாட்டு பாடல் ஆஸ்காரை வென்றுள்ளது. பாடலுக்கு இசையமைத்த எம்.எம் கீரவாணி ஆஸ்கார் விருதை வாங்கி கொண்டார். டோலிவுட் மக்கள் இதை கொண்டாடி தீர்க்கின்றனர்.

அதே போல் ஆஸ்கார் மேடையில் ஒலித்த இந்திய சிங்கப்பெண்களின் வெற்றியும் இங்கு கொண்டாடப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்ற 95 வது ஆஸ்கார் விருது விழாவில், இந்திய தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்து, கார்த்திகி கொன்சால்வ் இயக்கியிருக்கும் ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ஆவணப்படம், சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை வென்றுள்ளது. இதன் மூலம், ஆவணப்பட வரிசையில் ஆஸ்கர் வென்ற முதல் இந்திய படம் என்ற சரித்திரத்தை படைத்துள்ளது ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’

oscar  tamil

யானையை பற்றிய ஆவணப்படம்

முதுமலை வன உயிரியல் பூங்கா பகுதிகளில் ரகு என்ற யானையை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி என்ற இணையர்கள் பற்றிய ஆவணப்படம். இதில் இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஆழமான தொடர்பை மையக்கருத்தாக கொண்டு இயக்குனர் காட்சிப்படுத்துகிறார். 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் தற்போது ஆஸ்காரை வென்று சாதனை படைத்துள்ளது. அம்மு, பெல்லி, பொம்மன் ஆகிய மூவரின் அன்பு மற்றும் பிணைப்பு கிளைமாக்ஸில் பார்ப்போரையும் கண்கலங்க வைக்கும். இந்த படத்தை மிகவும் தத்ரூபமாக இயக்கிய பெண் இயக்குனர் கார்த்திகி நீலகிரி பகுதியில் வசித்தவர். புகைப்பட கலைஞரும் கூட.

இவர் தனது பயணத்தில் சந்தித்த விஷயத்தை ஆவணப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்தை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்தார். இந்தியாவை சேர்ந்த கார்த்திகி கோன்சால்வேசும், குனீத் மோங்காவும் சேர்ந்து இந்த ஆஸ்கார் சாதனையை நிகழ்ச்சியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

oscar  india

ஆஸ்கர் விருதை வாங்க இருவரும் மேடை ஏறிய தருணம், அங்கே அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த 2 பெண்களின் சாதனையை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகிறது.

இந்த பதிவும் உதவலாம்:சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP