Muthu Re-release : 18 வருடங்கள் கழித்து ரி-ரிலீஸான “முத்து” ! மாபெரும் வரவேற்பு

மழை வெள்ள பாதிப்புக்கு மத்தியிலும் 18  வருடங்கள் கழித்து ரி-ரிலீஸான முத்து திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்

blockbuster movie muthu

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே காலங்கடந்தும் பேசப்படும் அல்லது மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தால் அது போன்ற படங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல் எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் விரும்புவார்கள். அப்படியான படம் என ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தைக் குறிப்பிடலாம்.

actor rajnikanth

நாட்டாமை படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இது போன்று நாமும் ஒரு படம் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு ரவிக்குமார் எழுதிய கதை ரஜினிக்கு பிடித்து போக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று 1995ல் முத்து திரைப்படம் வெளியானது. ஏ, பி, சி என மூன்று செண்டர்களிலும் ஹிட் அடித்து அபரிவிதமான வசூலை குவித்தது.

actress meena

ரஜினிகாந்த் தந்தை, மகன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே தந்தை ரஜினிகாந்த் தோன்றினாலும் அவர் பேசிய வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். வாழ்க்கையில் அதிக நம்பிக்கை வைத்தவர்கள் நம்மை ஏமாற்றும் போதும், நாம் மிகக் கடினமான சூழல்களை எதிர்கொள்ளும் போதும் முத்து படத்தில் இடம்பெற்றிருந்த “விடுகதையா இந்த வாழ்க்கை” பாடல் பலருக்கும் நினைவில் வரும்.

மேலும் படிங்கTamil OTT Releases - ஜிகர்தண்டா டபுள் X டூ ரெய்டு... இந்த வார ஓடிடி ரிலீஸ்!

Director K.S.Ravikumar

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முத்து திரைப்படம் டிஜிட்டல் மெறுகேற்றலுடன் சுமார் 18 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மழை வெள்ள பாதிப்புக்கு மத்தியிலும் திரையரங்குகளை ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் ஷோவின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார், மீனா உட்பட படத்தில் பணியாற்றிய பலரும் முதல் ஷோவை ரசிகர்களுடன் உற்சாகமாகக் கண்டுகளித்துள்ளனர்.

மேலும் படிங்கHigh Earning Tamil Actress : 2023ல் அதிக ஊதியம் வாங்கிய தமிழ் நடிகைகள்

இதனிடையே அடுத்ததாகப் படையப்பா திரைப்படமும் வெளியாகும் எனக் கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP