தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய திரையுலகிலிருந்து இந்த வாரம் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. சித்தா வெளியாகிறதா இல்லையா ? ஓடிடி ரசிகர்களே உங்களுக்கான அப்டேட்.
ஒரு திரைப்படம் எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் சரி, இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் அப்படத்தை திரையரங்கில் ரசிப்பது கடினம். குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ திரையரங்கிற்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டால், மீண்டும் அதே படத்திற்கு அவ்வளவு தொகையைச் செலவு செய்ய மனம் ஒப்புக்கொள்ளாது. மேலும் நான்கு வாரங்களிலேயே அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி விடும் என்பதால் இரண்டாவது முறையாகத் திரையரங்கிற்கு செல்ல வேண்டுமா எனச் சிந்தனைகள் எழும். இதுவும் இந்தியாவில் ஓடிடி பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். திரையரங்குகளில் படம் வெளியாகிறதோ இல்லையோ, ஓடிடியில் வாரத்திற்கு குறைந்தது நான்கு படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து பார்க்கலாம்.
ஜிகர்தண்டா டபுள் X
தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் X படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தினை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். மதுரை ரவுடியாக ராகவா லாரன்ஸ் கலக்கியிருந்தார்.
மேலும் படிங்கHigh Earning Tamil Actress : 2023ல் அதிக ஊதியம் வாங்கிய தமிழ் நடிகைகள்
ஜப்பான்
தீபாவளி பண்டிகைக்கு வெளியான மற்றொரு படம் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த ஜப்பான் திரைப்படம் வரும் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்கTop 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ
ரெய்டு
கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்த ரெய்டு திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்திற்கு பிரபல இயக்குநர் முத்தையா வசனம் எழுதியிருந்தார். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இப்படம் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் டகரு படத்தின் ரீமேக் ஆகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation