தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாகக் கதாநாயகிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது உண்மை என்றாலும் காலங்கள் மாறிவிட்டன. பல முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகின்றனர். 2023 நிலவரப்படி அதிக ஊதியம் பெறும் தமிழ் நடிகைகளின் பட்டியலைப் பார்ப்போம். இந்த கட்டுரை முழுவதும் கோலிவுட் வட்டார தகவல்களின்படி எழுதப்பட்டுள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாய் ஊதியம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பவர். இந்த ஆண்டு இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. ஜவான், இறைவன் ஆகிய இரண்டு படங்களுக்குமே நயன்தாரா பத்து கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமன்னா
நடிகை தமன்னா திறமையான நடிகை என்றாலும் தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். இந்தாண்டு அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. இதில் அதிக கவனம் பெற்ற படம் லஸ்ட் ஸ்டோரிஸ் 2. படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி இருப்பார். இரண்டாவது அனைவரும் அறிந்த ஜெயிலர் திரைப்படம். கவாலா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அவர் ஆடிய ஹூக் ஸ்டெப் இன்று வரை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. ஐந்து கோடி முதல் ஏழு கோடி ரூபாய் வரை தமன்னா ஒரு படத்திற்கு ஊதியமாகப் பெறுகிறார். ஜெயிலரில் சில காட்சிகளுக்குத் தோன்றி ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி இருந்தாலுமே கூட ஐந்து கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார்.
மேலும் படிங்கTop 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ
சமந்தா
அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து துணிந்து நடிக்கும் சமந்தா இந்தாண்டு உலக சுற்றுலா சென்றுவிட்டதால் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். விஜய் தேவர்கொண்டாவின் குஷி படத்தில் அவருக்கு நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
திரிஷா
வயதானாலும் கூட அழகும் ஸ்டைலும் குறையாத நடிகை திரிஷா இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, லியோ என இரண்டு பெரிய படங்களில் நடித்திருந்தார். இதற்கு அவர் தலா ஐந்து கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார்.
மேலும் படிங்கNayan 75 : உணவுக்கான உரிமை - அரைகுறையாக வெந்த அன்னபூரணி
கீர்த்தி சுரேஷ்
அதிக ஊதியம் வாங்கும் தமிழ் நடிகைகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். இந்த ஆண்டு இவர் தசரா மற்றும் மாமன்னன் படங்களில் நடித்திருந்தார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation