Ponniyin Selvan 2 Young Kundavai : பொன்னியின் செல்வன் 2 சிறுவயது குந்தவை யார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2ல் சிறுவயது குந்தவையாக நடித்த பெண் யார்? என்பதை இங்கே பார்ப்போம். கடந்த 2 நாட்களாக இவர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

poinniyin selvan young kundhavi role
poinniyin selvan young kundhavi role

தமிழ் சினிமாவின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைக்காவியமாக வெளி வந்து விட்டது. உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வனை கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை 2 பாகமாக வெளியிட முடிவு எடுத்திருந்தார்.

முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட அறிமுகமாக இது இருந்தது. இந்நிலையில் 2வது பாகம் கடந்த ஏப்ர்ல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இதுவரை படத்தில் வசூல் 200கோடியை தாண்டி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்துள்ளது. படத்தில் புத்தகத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து இருப்பதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.

kundhavi trisha

அந்த வகையில் குந்தவையாக த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சிறுவயது குந்தவையாக நடித்த பெண் குறித்த தேடலும் அதிகமாகியுள்ளது. படத்தின் தொடக்கத்திலே ஆதித்ய கரிகாலன், நந்தினி சிறு வயது காதல் காட்சிகள் காட்டப்படும். அப்போது குந்தவை குறித்த கட்சிகளும் இடம் பெற்று இருந்தது. அந்த ரோலில் நடித்து இருப்பவர் குழந்தை நட்சத்திரம் நிலா.

இந்த பதிவும் உதவலாம்:கட்டுக்கோப்பான உடல்! நடிகர் சூர்யாவின் டயட் என்ன தெரியுமா?

இவர், வேற யாருமில்லை சின்னத்திரை பிரபலம் கன்யா பாரதியின் மகள் ஆவார். இவர் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடிப்பவர். மலையாள நடிகையான இவர், இயக்குனர் கவிதா பாரதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் ஒரே மகள் நிலா தான் சிறு வயது குந்தவையாக பொன்னியின் செல்வன் 2ல் நடித்துள்ளார்.

young kundavi

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP