herzindagi
image

முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க இந்த பேஸ் மிஸ்ட்களைப் பயன்படுத்திப்பாருங்கள்!

விலையுயர்ந்த பேஸ் மிஸ்ட்களை வாங்குவதற்கு பட்ஜெட் ஒரு தடையாக இருக்கலாம். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி DIY பேஸ் மிஸ்ட் செய்யலாம் என்பது குறித்த அழகுக்குறிப்புகள் இங்கே!
Editorial
Updated:- 2025-11-30, 23:01 IST

இன்றைக்கு பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாக்களில் அதிகம் உலாவக்கூடிய தகவல்களில் ஒன்று பெண்களின் அழகுக்குறிப்பு தொடர்பான சின்ன சின்ன வீடியோக்கள். பணிக்காக அலுவலகத்திற்கு சென்றாலும், வீட்டில் இருந்தாலும் எப்போதும் பெண்கள் தங்களின் முகம் பளபளப்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் போடும் மேக் அப் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், பேஸ் மிஸ்ட் ( Face mist) பெண்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் பேஸ் மிஸ்ட் பயன்படுத்தும் போது எந்தவொரு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

ரோஸ்வாட்டர் ஃபேஸ் மிஸ்ட்

பொதுவாகவே ரோஸ்வாட்டரை சருமத்திற்குப் பயன்படுத்தும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் PH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் நாள் முழுவதும் சருமத்தை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

  • ரோஸ் வாட்டர்
  • கிளிசரின்
  • ஸ்ப்ரே பாட்டில்

செய்முறை:

  • ரோஸ் வாட்டர் பேஸ் மிஸ்ட் செய்வதற்கு முதலில், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரை டீஸ்பூன் கிளிசரினை எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் இவற்றை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து சுத்தமான ஸ்ப்பேர பாட்டிலில் ஊற்றினால் போதும் சருமத்தை பளபளபாக்கும் ரோஸ் வாட்டர் மிஸ்ட்ரெடி. இந்த ஸ்ப்ரே நீங்கள் பயன்படுத்தும் போது, முகம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

அலோ வேரா ஃபேஸ் மிஸ்ட்:

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கவும், சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

  • அலோ வேரா ஜெல்
  • காய்ச்சி வடிகட்டிய நீர்
  • வெள்ளரி சாறு
  • கிளிசரின்.

செய்யும் முறை:

  • ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் காய்ச்சி வடிகட்டிய நீர் சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி சாறு சேர்க்கவும். இதன் பிறகு 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்துக் கொண்டு நன்கு குலுக்கிக் கொள்ளவும். பின்னர் இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு எளிய முறையில் செய்யக்கூடிய பேஸ் மிஸ்ட்களை மேக் அப் போடுவதற்கு முன் அல்லது பின்னதாக உபயோகிக்கலாம். குறிப்பாக டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதற்கு முன் மேக் அப்பிற்கு பின்னதாக பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தைத் தக்க வைத்து உடனடி புத்துணர்ச்சியை சருமத்திற்கு வழங்க உதவுகிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com