விஜய் - அஜித்துக்கு பிறகு கோலிவுட்டில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகராக திகழ்கிறார் நடிகர் சூர்யா. ஜெய் பீம் படத்திற்கு சூர்யாவின் மார்க்கெட் பல மடங்கு அதிகரித்து விட்டது. 47 வயதை கடந்தும் என்றும் இளமையில் ஜொலிக்கிறார். அதுமட்டுமில்லை வாரணம் ஆயிரம் படத்தில் சிக்ஸ் பேக்கில் தோன்றி ஆச்சரியத்தையும் தந்தார்.
சூர்யாவை பார்த்து கோலிவுட்டில் சிக்ஸ் பேக்ஸ் லுக்கை முயற்சி செய்தவர்கள் ஏராளம். உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள சூர்யா பின்பற்றும் டயட் பிளான் குறித்து பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:தளபதி விஜய் ஜிம்முக்கு செல்வாரா? அவரின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
சூர்யாவின் காலை உணவில் கட்டாயம் இருப்பது பால் மற்றும் முட்டை. அதன் பின்பு எண்ணெய் சேர்க்காத காலை உணவு. அவரின் உடற்பயிற்சிக்கு எனர்ஜி கொடுக்கும் வகையில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்கிறார். மதியம் சாதம், சிக்கன் கறி சூர்யாவின் ஃபேவரெட். அதே போல் பொரித்த உணவுகள், சர்க்கரை சேர்த்த உணவுகள், அதிக உப்புள்ள உணவுகளை அறவே தவிர்த்து விடுவாராம். டீக்காஸ் பானங்களை எடுத்து கொள்ளும் பழக்கம் உடையவர்.
உடற்பயிற்சி செய்ய சூர்யா தவறவே மாட்டார். சைக்கிளிங், எடை தூக்குதல், தசை வலிமை பயிற்சி, நடைப்பயிற்சி என ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சியில் ஈடுபடும் பழக்க கொண்டவர்.
இந்த பதிவும் உதவலாம்:இந்த வாரம் ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com