herzindagi
ponniyin selvan  box office

Ponniyin Selvan 2 Box Office : வசூலில் சொல்லி அடிக்கும் பொன்னியின் செல்வன் 2.. பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை பொன்னியின் செல்வன் 2 நடத்திருக்கும் வசூல் வேட்டை. 
Editorial
Updated:- 2023-05-03, 09:46 IST

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, உலக நாயகன் கமல் வரை பலரும் கல்கியின் கற்பனை காவியமான பொன்னியின் செல்வன் கதையை திரைக்காவியமாக எடுக்க முயற்சி செய்தனர். அவர்களின் கனவை நிஜமாக்கி தமிழ் சினிமாவை மற்றொரு பாதையில் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிரம்மாண்ட அறிமுகமாக இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரம் 28ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 விரிவான திரைக்கதையாக அமைந்துள்ளது. கல்கியின் நாவலில் இருந்து சின்ன சின்ன மாற்றங்கள், ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர். இது விமர்சனங்களை சந்தித்தாலும் படைப்பை மனதார பாராட்டியுள்ளனர் ரசிகர்கள்.

இந்த பதிவும் உதவலாம்:விமலின் தெய்வ மச்சான் விமர்சனம்! படம் எப்படி இருக்கு?

ps  box office ()

பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபீஸ்

பொன்னியின் செல்வன் 2 வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் மழை பொழிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைக்கா அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த படங்களின் லிஸ்டில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் இடத்தை பிடிக்கும் என சினிமா விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

இந்த பதிவும் உதவலாம்:இந்த வாரம் ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com