தமிழ் சினிமாவின் கனவு படமாக பார்க்கப்பட்டது பொன்னியின் செல்வன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, உலக நாயகன் கமல் வரை பலரும் கல்கியின் கற்பனை காவியமான பொன்னியின் செல்வன் கதையை திரைக்காவியமாக எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் பலருக்கும் வெறும் கனவாகவே போன இந்த விஷயம் இயக்குனர் மணிரத்னம் வாழ்க்கையில் நிஜமானது. பலரும் முயற்சி செய்த பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து சாதித்துக் காட்டியுள்ளார் மணிரத்னம். இந்த பிரம்மாண்ட காவியத்தை 2 பாகமாக வெளியிட முடிவு செய்தார்.
இந்த பதிவும் உதவலாம்:வயதானவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்
அதன் படி சென்ற வருடம் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. படத்தில் வந்தியதேவனாக நடித்த கார்த்தி, குந்தவை த்ரிஷா, ஆதித்ய கரிகாலன் விக்ரம், நந்தினி ஐஸ்வர்யா ராய் என ஒவ்வொருவரின் நடிப்பும் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. பான் இந்தியா மூவியாக வெளியான இந்த படம் உலகளவில் 500 கோடி வசூலை தாண்டியதாகவும் படக்குழு அறிவித்தது. இந்த வெற்றியை படக்குழு மிகுந்த மகிச்சியுடன் கொண்டாடியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2வது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. முதல் பாகத்தை போலவே 2வது பாகத்திற்காக எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
முதல் பாகத்திற்கு படக்குழு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்தது. சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வருகை தந்து சிறப்பு உரையாற்றினார். இந்நிலையில் 2வது பாகத்திற்கும் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு முடிவு செய்தது. பொனியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெற்ற் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. ஏ.ஆர் ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒர்வ்வொரு ராகத்தில் இசை விருந்தளித்தனர்.
இந்நிலையில் 2வது பாகத்தில் இடம்பெற்ற ’அக நக பாடல்’ முதல் சிங்கிளாக கடந்த வாரம் வெளியாகியது. குந்தவை - வந்தியதேவன் காதல் உணர்வை வெளிப்படுத்தும் இந்த பாடல் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. படத்தில் இன்னும் 6 பாடல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அரங்கேறவுள்ளது. அதுமட்டுமில்லை படத்தின் ட்ரெய்லரும் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என படகுழு அறிவித்துள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு, நடிகர் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றனர். படக்குழு இந்த தகவலை சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
பொன்னியின் செல்வம் முதல் பாகத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து வெளியிட்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி இந்த ட்ரெய்லர் வெளியானது.சுமார் 3.23 நிமிடங்கள் ஓடிய இந்த ட்ரெய்லரில் கண்களை கவரும் வசீகர காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றன.நடிகர் கமல்ஹாசனின் குரலில் ட்ரெய்லர் தொடங்கியது. அப்படியே ரசிகர்களை பொன்னியின் செல்வன் கதை களத்திற்குள் கொண்டு சென்றது. காதல், துரோகம், சூழ்ச்சி, நட்பு, வஞ்சகம், பகை என ஒவ்வொரு ஃப்ரேமும் கதையின் ஆழத்தை புரிய வைத்தது. அதிலும் குறிப்பாக நந்தினியாக ஐஸ்வர்யா ராயின் தோற்றம் மொத்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. படத்தை நிச்சயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் குறித்த எதிர்ப்பார்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ட்ரெய்லரில் என்னவெல்லாம் ஹிண்ட் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே யோசிக்க தொடங்கி விட்டனர். ஆதித்ய கரிகாலனின் மரணம், குந்தவை - வந்திய தேவனின் காதல் காட்சி, அருள் மொழி வர்மனை காப்பாற்றும் உருவத்தின் உண்மையான முகம், சோழர்களின் போர் என பல விஷயங்களை ட்ரெய்லரில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சினிமா விமர்சகங்கள். அதே போல் முதல் பாகத்தில் இருந்த சர்ச்சைகளும் நிச்சயம் 2வது பாகத்தில் இருக்காது எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி குறிப்பிட்டது போல வந்தியதேவன் - குந்தவை காதல் பாடல் காட்சி விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை த்ரிஷாவின் டயட் பிளான் பற்றி தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com