நடிகைகள் என்றாலே அவர்கள் தொழிலதிபர்களை தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பார்வை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்பு பல நடிகைகள் அடுத்தடுத்து தொழிலதிபர்களை மணந்து சினிமாவை விட்டு விலகினர்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லை டோலிவுட், பாலிவுட்டிலும் இதே நிகழ்ந்தது. அதே போல் சில நடிகைகள் தன்னை விட வயதில் அதிகம் மூத்தவர்களை திருமணம் செய்தது இன்னும் அதிர்ச்சி அளித்தது. அந்த வகையில் இந்த பதவில் வயதானவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகைகளை குறித்து பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:வருகிறார்கள் சோழர்கள் இன்று வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்
ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகை ஸ்ரீதேவி மிகவும் அழகானவர். அவரை கல்யாணம் செய்ய பல தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர். ஆனால் ஸ்ரீதேவி பாலிவுட் பிரபலம் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். போனி கபூருக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி ஆவார்.
ரீமா சென்
தமிழில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்தவர் ரீமா சென். விஜய், விக்ரம், மாதவன் என உச்ச நடிகர்களுடன் நடித்து பீக்கில் இருந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இப்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ரீமாசென்னின் கணவர் அவரை விட வயதில் அதிகம் மூத்தவர்.
காதல் சந்தியா
காதல் திரைப்படம் மூலம் அறிமுகமான சந்தியா கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். இவரின் கணவர் பிரபல ஐடி நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். சந்தியாவை விடவும் வெங்கட் சந்திரசேகரன் வயதில் மூத்தவர் என்ற சர்ச்சை அவர்களின் திருமணத்தின் போது வெடித்தது.
மாளவிகா
தமிழில் அஜித்துடன் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. முரளி, சரத் குமார், விவேக் என பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு உமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் தொழிலதிபவர் ஆவார். மாளவிகாவை விட உமேஷ் மேனன், வயதில் அதிகம் மூத்தவர் என்பதை ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation