தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளாக மேலாக ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. தற்போது தமிழ் சினிமாவில் செல்ல குந்தவையும் இவர் தான். பல வருடங்களுக்கு பின்பு விஜய் - த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார் நடிகை த்ரிஷா.
இவரை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் பாடல் ‘அவள் உலக அழகியே’ இந்த பாடலில் வரும் அனைத்து வரிகளும் த்ரிஷாவுக்காவே எழுதப்பட்டது போல் இருக்கும். அதே சிரிப்பு, இளமை, அழகு என 40 வயதை கடந்தும் அழகில் ஜொலிக்கிறார் த்ரிஷா.
இந்த பதிவும் உதவலாம்:தமிழ் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்து இருக்கீங்களா?
மிஸ் சென்னை பட்டத்தில் தொடங்கிய இவரின் சினிமா வாழ்க்கை, மாடலிங், துணை நடிகை என விரிந்து பின்பு தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக மாறினார். இன்றும் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். த்ரிஷா தனது உடலை கட்டுப்போக்காக வைத்துக் கொள்ளவும், என்றும் இளமையுடன் இருக்க பின்பற்றும் டயட் முறையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
த்ரிஷா எப்போதுமே வெளி உணவுகளை எடுத்து கொள்ள மாட்டாராம். அதே போல் அதிக உப்பு நிறைந்த துரித உணவுகளையும் சேர்த்து கொள்ள மாட்டார். ஷூட்டிங் செல்லும் போது கூட வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே பேக் செய்து எடுத்து செல்வாராம். புரொடக்ஷன் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவாராம்.
உணவில த்ரிஷா அதிகளவு சேர்த்து கொள்வது எண்ணெய் சேர்க்காத ஆம்லெட், பராத்தா. காலை உணவாக பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து கொள்கிறார். அரிசி உணவுகளை அளவுடன் தான் சேர்த்து கொள்வாரம்.
உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள த்ரிஷா சைக்கிளிங் செய்கிறார். அதே போல் அதிகளவு சிம்மிங் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார். இந்த பயிற்சிகளை ஒருநாளும் மிஸ் செய்யாமல் அன்றாடம் செய்கிறார். இதுவே அவரின் அழகுக்கான காரணம்.
இந்த பதிவும் உதவலாம்:நயன்தாரா உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com