“தவறான நிர்வாகம்” தமிழக அரசை சாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கு அலட்சியம், தவறான நிர்வாகம் காரணமென இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Main sana

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் புலம்பி வருகின்றனர். ஏற்கெனவே நடிகர் விஷால், நடிகை அதிதி பாலன், நடிகை கீர்த்தி பாண்டியன் தங்களது வேதனையை எக்ஸ் தளத்தில் கொட்டித் தீர்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது இசையமையாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்துள்ளார்.

 sana

சந்தோஷ் நாராணயன் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது :

100 மணி நேரம் மின்வெட்டு

10 வருடங்களாகத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. வாரக்கணக்கில் குறைந்தது முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒவ்வொரு வருடமும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளின் போது 100 மணி நேரம் மின்விநியோகம் தடைபடுவது உண்மை. இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகள் புதிய உச்சங்கள் தொட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 sana

மேலும் படிங்கமக்களுக்கு உதவும் ரஜினி பட நாயகி ! ரசிகர்களை டென்ஷனாக்கிய ஆண்டவர்

வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நான் வசிக்கும் பகுதி வரலாற்று ரீதியாக ஏரிப் பகுதியோ அல்லது தாழ்வான பகுதியோ கிடையாது. கொளப்பாக்கம் எனப் பெயரிடப்பட்ட சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு பல திறந்தவெளி நிலங்களும், குளங்களும் இருக்கின்றன.

தவறான நிர்வாகம்

வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் இணைத்து அது ஒவ்வொரு முறையும் ஆறுபோல் பெருக்கெடுத்து கொளப்பாக்கம் பகுதியில் வசிப்பவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்த நேரத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் மருத்துவ அவசரநிலை மரணத்தை விளைவிக்கிறது எனக் கவலை கூறியுள்ளார். என்னால் முடிந்தவரை ஜெனரேட்டர் கொண்டு அக்கம்பக்கத்தினரின் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்புவது மற்றும் இதர உதவிகளைச் செய்து வருகிறேன். என்னிடம் நிரந்திரமாகவே இருக்கும் ஒரு படகு மற்றும் பல மோட்டார் பம்புகளை கொண்டு மீட்பு பணிகளுக்கு உதவுகிறேன் எனக் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

மேலும் படிங்கஎம்.எல்.ஏக்களை காணோம்! இறங்கி வேலை செய்யுங்க - நடிகர் விஷால் அதிரடி

கடினமான இந்தத் தருணத்தில் சென்னை மக்களைப் பாராட்டுகிறேன். எங்கு சென்றாலும் நம்பிக்கையை காணமுடிகிறது. வரும் காலங்களில் தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். என்னிடம் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லை, ஆனால் இப்போதைய நிலைமையைவிட விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் வெகுவிரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நம்புவதாகச் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP