herzindagi
image

Globe Trotter song: ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

Globe Trotter song: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
Editorial
Updated:- 2025-11-11, 13:21 IST

Globe Trotter song: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியின் திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை கீரவாணி இசையில் நடிகை ஸ்ருதி ஹாசன் பாடி இருக்கிறார்.

மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படம்:

 

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் மெகா ஹிட்டான நிலையில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களும் ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புக்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

அந்த வகையில், மகேஷ் பாபுவுடன் இணைந்து ராஜமௌலி பணியாற்றுவதாக வெளியான தகவல்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில், பான் இந்தியன் அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக மகேஷ் பாபு திகழ்கிறார். இதனால் இருவரும் இணையும் இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

மேலும் படிக்க: Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு; தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கைது

 

க்ளோப் ட்ராட்டர் பாடல்:

 

குறிப்பாக, இப்படத்தை க்ளோப் ட்ராட்டர் (Globe Trotter) என்று படக்குழுவினர் குறிப்பிட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு பயணப்படும் ஒரு நபராக மகேஷ் பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா மற்றும் வில்லனாக பிரித்வி ராஜ் நடிக்கின்றனர். அதன்படி, கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிரித்வி ராஜ் நடிப்பதாக அவரது போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

 

மேலும், இப்படத்தின் முன்னோட்டம் குறித்த நிகழ்வு நவம்பர் 15-ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடி இருக்கிறார். இது தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com