herzindagi
image

Bison twitter review: ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி? பைசன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்

Bison twitter review: மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Editorial
Updated:- 2025-10-17, 14:27 IST

Bison twitter review: தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு பைசன் திரைப்படத்தின் மீது இருந்தது. அதன்படி, இன்றைய தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க: Dude twitter review: ஹாட்ரிக் வெற்றி பெற்றாரா பிரதீப் ரங்கநாதன்? ட்யூட் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்

 

தனித்துவமான கதை சொல்லும் விதம் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இயக்குநர்கள் பட்டியலில் மாரி செல்வராஜ் முதன்மையான இடத்தில் இருக்கிறார். குறிப்பாக, இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவை.

 

இந்நிலையில், துருவ் விக்ரமின் திரைப்பயணத்திலும் பைசன் திரைப்படம் குறிப்பிடத்தக்க இடத்தை அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பசுபதி, அனுபமா, அமீர், லால் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்போர்ட்ஸ் டிராமா வகையைச் சார்ந்த பைசன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் விமர்சனம் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: Lokah OTT release: வசூல் சாதனை படைத்து பெரும் வரவேற்பை பெற்ற லோகா திரைப்படம்; எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?

 

பைசன் ட்விட்டர் விமர்சனம்:

 

கிறிஸ்டோஃபர் கனகராஜ் என்பவரது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "விருதுகளை குவிக்கும் அளவிற்கு பசுபதியின் நடிப்பு பைசன் படத்தில் அமைந்துள்ளது. துருவ் விக்ரமின் கடுமையான முயற்சி, ரெஜிஷாவின் நடிப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை, பாடல்கள், காட்சி அமைப்பு ஆகியவை பாராட்டும் வகையில் உள்ளன. வன்முறை உள்ளிட்ட சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது படத்தில் குறையாக உள்ளது. படத்தின் இறுதியில் இடம்பெற்ற கபடி போட்டி மற்றும் உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்தன. மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமாபட்டி என்ற ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறப்பான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக பைசன் உருவாகி இருக்கிறது. துருவ் விக்ரமின் நடிப்பு படத்தில் தனித்து தெரிகிறது. குறிப்பாக, உடல் மொழி, குரல் என அனைத்தும் விக்ரமை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. படத்தில் குறை சொல்லும் அளவிற்கு என்று ஏதும் இல்லை" என பதிவிடப்பட்டுள்ளது.

ஸ்டார் டாக்கீஸ் என்ற ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "மாரி செல்வராஜ் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். தனது முந்தைய படங்களில் இருந்த சில தவறுகளை இப்படத்தில் சரி செய்திருக்கிறார். படத்தின் கதை சிறப்பாக உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைகூற முடியாத அளவிற்கான நடிப்பை துருவ் விக்ரம் வழங்கி இருக்கிறார். அனுபமாவிடம் இருந்து மாறுபட்ட நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. லால், அமீர், ரஜிஷா விஜயன் என எல்லோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com