herzindagi
image

Chennai Rains: தித்வா புயலால் அதிகரிக்கும் கனமழை; உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்

Ditwah Cyclone: தித்வா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த சூழலில், மழைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2025-12-03, 12:58 IST

Monsoon Health Tips: தித்வா புயலின் காரணமாக, தமிழ்நாட்டின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மழை - தித்வா புயல் காரணமாக வானிலை பாதிப்பு:

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இன்று அதிகாலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேளச்சேரி, அம்பத்தூர், ஜிஎஸ்டி சாலை, ஆற்காடு சாலை மற்றும் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புகள்:

 

இந்த மழைக் காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாத்து, ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் அதிகரிக்கும் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் காரணமாக, நோய் தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பாதுகாப்பதற்கான வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீரான உணவுமுறை:

 

  • மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே நம் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு உணவுமுறையில் கவனம் செலுத்துவது முக்கியம்.
  • சத்தான பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
  • பூண்டு மற்றும் இஞ்சி: இவை இரண்டுமே இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. சளி மற்றும் காய்ச்சலை தடுக்க இவை பெரிதும் உதவும். தினமும் உணவில் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Ginger and garlic

 

  • மஞ்சள்: மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டிஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன. இது விரைவாக குணமடைய உதவுகிறது. தினமும் மஞ்சள் கலந்த பால் அல்லது உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீர்ச்சத்தின் அவசியம்: வானிலை குளிர்ச்சியாக இருந்தாலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மழைக்காலத்தில் வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை கலந்த சூடான நீர், மூலிகை தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

 

சுகாதாரத்துடன் செயல்பட வேண்டும்:

 

நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். இதன் வாயிலாக கிருமிகள் நம்மை நெருங்குவதை கட்டுப்படுத்தலாம்.

 

  • கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: மழைக்காலத்தில் கிருமிகள் பெருகுவதால், சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது அவசியம். இந்த எளிய பழக்கம் சளி, காய்ச்சல் மற்றும் குடல் தொற்றுகள் உட்பட பல நோய்களை தடுக்கும்.

Health Tips

 

  • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: உங்கள் வசிப்பிடம் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும். குறிப்பாக சமையலறை மற்றும் குளியலறை பகுதிகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். கனமழையின் போது ஜன்னல்களை மூடி வைத்திருப்பதன் மூலம் தண்ணீர் உள்ளே நுழைந்து, பூஞ்சை வளரக்கூடிய ஈரமான பகுதிகள் உருவாக்குவதை தவிர்க்கலாம்.

 

உடல்நலனில் கூடுதல் கவனம்:

 

இவை மட்டுமின்றி உங்கள் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்தும் விதமாக செயல்பட வேண்டும். உதாரணமாக, மழைக்காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியலாம்.

 

  • சரியான ஆடையை தேர்வு செய்ய வேண்டும்: இலகுவான, அழுத்தம் இல்லாத துணிகளை அணியலாம். இவை விரைவில் உலர்ந்து விடும். இதனால் ஈரமான ஆடைகளுடன் இருப்பதை தவிர்க்கலாம். மழை நேரத்தில் வெளியே செல்ல நேர்ந்தால் குடை போன்ற உபகரணங்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • பூஞ்சை தொற்றுகளை தவிர்க்கும் முறை: மழைக்காலம் பொதுவாக கால் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமானால், உடனடியாக அவற்றை நன்கு துடைத்து உலர்த்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கால்களை துடைத்த பின் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ

 

உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்:

 

மழை காலத்திலும் உடற்பயிற்சியை நிறுத்திவிடக் கூடாது. இது உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

  • வீட்டில் செய்யக் கூடிய உடற்பயிற்சி: மழை காரணமாக வெளியே செல்லும் நடவடிக்கைகள் தடைபடும். ஆனால் சுறுசுறுப்பாக இருப்பதை இது தடுக்க கூடாது. யோகா, பைலேட்ஸ் அல்லது வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சிகளை முயற்சி செய்யலாம். இது உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
  • தொடர்ச்சியான பயிற்சிகள்: தினசரி ஒரு சிறிய உடற்பயிற்சி கூட உங்கள் மனநிலையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். காலையில் ஸ்ட்ரெட்ச்சிங் அல்லது மாலையில் நடைபயிற்சி என ஒரு வழக்கத்தை அமைத்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

புயல் நேரத்தில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய கருவிகள்:

 

தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நாட்களில் வானிலை குறித்து அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இது உங்கள் அன்றாட பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும்.

 

  • வானிலை அறிக்கைகளை கண்காணித்தல்: வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். இது உங்கள் நடவடிக்கைகளை திட்டமிடவும், கனமழை அல்லது வெள்ளத்தில் தேவையற்ற விதமாக வெளியே செல்வதை தவிர்க்கவும் உதவுகிறது.
  • அத்தியாவசிய கருவிகள்: ஒரு முதலுதவி பெட்டி, டார்ச்லைட், பேட்டரிகள் மற்றும் கெட்டுப்போகாத உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு அடிப்படை அவசரகால கருவியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாராக இருப்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் மன அமைதியை உறுதி செய்கிறது.

 

இந்த பாதுகாப்பு செயல்முறைகள் அனைத்தையும் சீராக பின்பற்றினால், மழைக்காலத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை சீராக பராமரித்து நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com