மக்களுக்கு உதவும் ரஜினி பட நாயகி ! ரசிகர்களை டென்ஷனாக்கிய ஆண்டவர்

மழைவெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு திரையுலகினரின் பங்களிப்பு குறித்து இந்தப் பதவில் பார்க்கலாம்.

 
Main malai

எப்போதும் யாருக்கும் புரியாதபடி எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிடும் நடிகர் கமல்ஹாசன் இம்முறை மக்களுக்குப் புரியும்படி அரசுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். அதில் அரசு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும் எனவும் இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2015,2020ஆம் ஆண்டுகளில் வெள்ளம் போது தமிழக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகக் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் பரவும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அரசுக்கு சாதகமாகப் பேசியுள்ளார். சினிமாவில் அற்புதமான நடிகரான கமல் தற்போது ஒத்த சீட்டிற்காக நிஜத்திலும் நடிப்பதாக ரசிகர்கள் அவரைச் சாடியுள்ளனர்.

மேலும் பொதுமக்களுக்கு உதவிட மக்கள் நீதி மய்யத்தினருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவரது கட்சியினர் உதவி செய்வதாக எந்தத் தொலைக்காட்சியிலும் செய்திகள் வெளிவரவில்லை.

நடிகர் விஜய் ரசிகர்களின் பங்களிப்பு

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் ரசிகர்களுடன் நிவாரண முகாம்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

சென்னை மழை பாதிப்பு… திரைத் துறையில் முதல் ஆளாய் நிவாரணத் தொகை அறிவித்த கார்த்தி – சூர்யா…#CycloneMichaung#ChennaiRains#actorsuryahttps://t.co/2jVVYXBWwv

— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 5, 2023

சிங்கம் சூர்யா அவரது தம்பி சிறுத்தை கார்த்தி முதற்கட்டமாகப் பத்து லட்சம் ரூபாயை விடுவித்து ரசிகர்கள் வழியாகப் பொதுமக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் சூர்யா மற்றும் கார்த்தியின் ரசிகர்களை நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.

சமூகவலைதள போராளி பார்கவ்

பார்கவ் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து அதிகாரிகளின் கவனத்திற்கு அதைக் கொண்டு சென்று உதவி கிடைத்திட வழிவகை செய்கிறார்.

மேலும் படிங்கஎம்.எல்.ஏக்களை காணோம்! இறங்கி வேலை செய்யுங்க - நடிகர் விஷால் அதிரடி

களத்தில் இறங்கிய நடிகை மிர்னா

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் உதவி தேவைப்படுவோரின் விவரங்களைக் கேட்டறிந்து அதை உறுதிப்படுத்திய பிறகு தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு உதவி கிடைத்திட எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துகிறார்.

நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், நிவேதா பெத்துராஜ் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகை ஆத்மிகா தான் வசிக்கும் காரப்பாக்கம் பகுதியில் வெள்ளநீர் தேங்கி இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லையென வேதனைத் தெரிவித்துள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP