herzindagi
kushi songs

Kushi : குஷி படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

விஜய் தேவர்கொண்டா சமந்தா நடிக்கும் குஷி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. என் ரோஜா நீயா என தொடங்குகிறது இந்த பாடல்...
Editorial
Updated:- 2023-05-11, 09:42 IST

நடிகையர் திலகம் படம் மூலம் ஏற்கெனவே ஹிட் அடித்த ஜோடி விஜய் தேவர்கொண்டா- சமந்தா. இவர்கள் மறுபடியும் இணைந்திருக்கும் திரைப்படம் குஷி. வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் விஜய் தேவர்கொண்டா தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சிறப்பு நாளில் குஷி படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ஷிவ நிர்வாணா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், ரோகிணி, கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. தொடர்ந்து சமந்தா ஹீரோயின் லீட் ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் கமர்ஷியல் படமாக குஷி வெளியாகவுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:ரஜினிக்கு அப்படியொரு ஹிட் . காலத்தால் அழிக்க முடியாத மனோபாலாவின் திரைப்பயணம்

samanatha kushi movie

குஷி படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் ‘என் ரோஜா நீயே’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் தேவர்கொண்டா - சமந்தா இருவருக்கும் இது மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. லைகர், சாகுந்தலம் தோல்விக்கு பிறகு இந்த படத்தை இருவரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

பாடலில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து இந்த படத்தில் சமந்தா இஸ்லாமிய பெண்ணாக நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இருவருக்குமான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மிகவும் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படம் கட்டாயம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த வாரம் ஒடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com