மனோபாலாவின் திரைப்பயணம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். காலத்தால் அழிக்க முடியாத மனோபாலா இயக்கிய, நடித்த படங்கள் குறித்து பார்ப்போம். 3 தலைமுறை நடிகர்களுடனும் நடித்தவர்.
ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் மனோபாலாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் என பன்முகம் கொண்ட மனோபாலாவின் இறப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவருடன் நடித்த, பயணித்த சக சினிமா கலைஞர்கள் மனோபாலாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த பதிவும் உதவலாம்:வசூலில் சொல்லி அடிக்கும் பொன்னியின் செல்வன் 2.. பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு தெரியுமா?
சமூகவலைத்தளங்களில் பலரும் அவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சினிமாவை நேசித்த மனோபாலாவின் ஆகச் சிறந்த படைப்புகள் குறித்து இப்போது பார்ப்போம்.
தஞ்சாவூரை சேர்ந்த மனோபாலா ஓவியத்தில் பட்டப்பிடிப்பு முடித்தார். ஆனால் தனக்கான எதிர்காலத்தை அவரி சினிமாவில் உருவாக்க நினைத்தார். அதன் படி கமல்ஹாசன் அறிமுகத்தால் இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்பு கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாய கங்கை என்ற படத்தை இயக்கினார். முதல் படம் சரிவர போகாததால், அடுத்து மோகனை வைத்து பிள்ளை நிலா எடுத்தார். சூப்பட் டூப்பர் ஹிட் அடித்தது. ரஜினிக்கு மிகப் பெரிய ஹிட் அடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கியவர் மனோபாலா. கிட்டத்தட்ட 24 படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய கடைசி படம் நைனா.
வெள்ளித்திரை படங்கள் மட்டுமில்லை சின்னத்திரை சீரியல்களையும் இயக்கி அதில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தையும் தயாரித்தார். சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை 3 தலைமுறை நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த பெருமை மனோபாலாவுக்கு உண்டு. அவரின் இறப்பும் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம். கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்ட மனோபாலா நேற்றும் இயற்கை எய்தினார். அவரது உடல் வளரவாக்கத்தில் இருக்கும் மின்மயனாத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விவேக், மயில்சாமி இறப்புக்கு பின்பு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மனோபாலாவின் இறப்பை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: பொன்னியின் செல்வன் 2 சிறுவயது குந்தவை யார் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation