தமிழில் ஜனவரி மாதம் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி தியேட்டர்களை விழாக்கோலம் ஆக்கின. விஜய், அஜித் ரசிகர்கள் கட் அவுட், போஸ்ட்ர் என அந்த நாளை கொண்டாடி தீர்த்தனர். விடுமுறை தினம் என்பதால் தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. அதன் பின்ப எந்த பெரிய பட்ஜெட் படங்களும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் மார்ச் மாதம் கடைசியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 1 வெளியாகியுள்ளது. 2 படங்களும் ஒருநாள் இடைவெளியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சிம்புவின் பத்து தல சிம்பு ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதே போல் சூரி ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் விடுதலை பார்ட் 1 ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன.
2 படங்களும் தியேட்டரில் நேரடியாக வெளியாகி இருப்பதால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் விவரங்களும் சினிமா ஆர்வலர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பத்து தல
மார்ச் 30 ஆம் தேதி வெளியான பத்து தல திரைப்படம் 5 நாள் முடிவில் 48 கோடி வசூல் சாதனை நிகழ்ச்சி இருப்பதாக பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் வசூல் நிலவரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை சிம்பு நிரூபித்து விட்டார்.
விடுதலை
முதன்முறையாக சூரி கதையின் நாயகனாக அறிமுகாகி இருக்கிறார். அவரின் முதல் படமே வசூலில் மாபெரும் சாதனை நிகழ்ச்சி இருப்பது கோலிவுட்டில் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. 4 நாள் முடிவில் விடுதலை திரைப்படம் 28 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation