தாகத் படத்தின் நாயகி கங்கனா ரனாவத் வெறும் நடிகை மட்டுமில்லை. ஃபேஷன் ஐகானிக்காவும், எந்த ஒரு விஷயத்திலும் தைரியமாக தனது கருத்துக்களை முன் வைக்கும் ஆளுமை திறன் கொண்டவராகவும் அறியப்படுகிறார். அதே போல் அவரின் ஃபிட்டனஸ் ரகசியமும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருக்க கங்கனா ரனாவத் என்ன ஃபிட்னஸ் மந்திரத்தை பின்பற்றுகிறார்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைவி படத்திற்காக கங்கனா தனது எடையில் 20கிலோவை கூட்டினார். ஷூட்டிங் முடிந்ததும் அந்த எடையை அப்படியே குறைத்து பேக் டூ ஃபார்ம் வந்து அனைவ்ரையும் ஆச்சரியப்படுத்தினார். அப்படி எப்படி தெரியுமா? முறையாக கங்கனா பின்பற்றிய ஃபிட்னஸ் மற்றும் டயட். அதுக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்:நயன்தாரா உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?
கங்கனா ரனாவத் தனது உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்ள வாரத்தில் 5 நாட்கள் ஜிம்மிற்கு சென்று தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். இது அவரின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஓட்ட பயிற்சியுடன் கங்கனாவுக்கு குத்து சண்டை செய்வதும் பிடிக்கும். இதுத்தவிர கங்கனா தினமும் பல வகையான உடற்பயிற்சிகளை முறையாக செய்கிறார்.கார்டியோ உடற்பயிற்சி நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கங்கனாவின் உடற்பயிற்சி திட்டத்தில் கார்டியோ மற்றும் எடை பயிற்சிகளும் அடங்கும். ட்ரெயினர் உதவியுடன் நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
யோகா உடல் ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். கங்கனாவுக்கு யோகா மீது தனி ஈடுபாடு. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள கங்கனா தினமும் தியானம் செய்கிறார். கூடவே யோகா பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.
கங்கனா ரனாவத் சைவ உணவை விரும்பி சாப்பிடுகிறார். கங்கனாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான். சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடும் கங்கனா பச்சை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்கிறார். எண்ணெய்யில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை கங்கனா தவிர்த்து விடுகிறார். தனது உணவில் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுடன் சாலட்டை அதிகம் சேர்த்து கொள்கிறார்.
கங்கனா ,கோதுமை தவிடு பொடியில் செய்யப்படும் ரொட்டி, வேகவைத்த காய்கறிகளை மதிய உணவில் எடுத்துக் கொள்கிறார். அதே போல் அவர் இரவு நேரத்தில் சூப் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இடையிடையே பசிக்கும் போது புரோட்டீன் ஷேக் குடிப்பதும் கங்கனாவுக்கு பிடித்தமான ஒன்று.
இந்த பதிவும் உதவலாம்:தமன்னாவின் டயட் ரகசியம் என்ன தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com